உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தை கடைப்பிடிப்பதன் காரணமாக இது சமு தாயத்தில் பெரியதொரு மாற்றத்தை ஏற் படுத்தி வருகிறது. அதை வலியுறுத்தும் விதமாக சென்னையில் உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையான பிரசாந்த் மருத் துவமனைகளில் 'தாய்ப்பால் ஊட்டுவதை வலியுறுத்துதல் - வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு வித்தியாசத்தை ஏற்படுத்துதல்' என்ற தலைப்பில் ஒரு வாரகால விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தாய்ப்பால் தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் இறுதிப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கும், மேலும் இதில் கலந்து கொண்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு உதவி காவல் துறை ஆணையர் ஷர்மு ராஜன், திரைப்பட இயக்குனர் ரா.கார்த்திக், பிரசாந்த் குழும மருத்துவமனைகளின் தலைவர் கீதா அரிபிரியா உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய பிரசாந்த் குழும மருத்துவமனைகளின் தலைவர் கீதா அரிபிரியா கூறுகையில், உலக தாய்ப்பால் வாரத்தில் வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு பயனுள்ள நிகழ்வுகள் மற்றும் செயல்பாடு களை ஏற்பாடு செய்ததில் நாங்கள் மகிழ்ச்சி யடைகிறோம். எங்கள் மருத்துவமனை களைப் பொறுத்தவரை புதிதாகப் பிறந்த குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்வு என்பது முழு குடும்பத்தின் கூட்டு முயற்சியை சார்ந்து உள்ளது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
எங்கள் மருத்துவ நிபுணர்கள் குழு தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கும் வழி காட்டியதோடு, அவர்கள் வெற்றிகரமான பாலூட்டுதல் மற்றும் குழந்தைகளை சிறப்பாக கவனித்துக் கொள்வது குறித்தும் எடுத்துக் கூறியது என்று தெரிவித்தார்.
பிரசாந்த் மருத்துவமனைகளின் குழந்தை மருத்துவ துறைத் தலைவர் டாக்டர் விஜய குமார் கூறுகையில், தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக பல்வேறு தவறான எண்ணங்கள் இன்று பல பெண்களிடம் நிலவுகிறது. குறிப்பாக வேலைக்கு செல்லும் தாய்மார் களிடமும், புதிதாக குழந்தை பெற்றவர் களிடமும் அது அதிக அளவில் காணப் படுகிறது. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எங்களின் இந்த ஒரு வார கால நிகழ்ச்சி நடைபெற்றது. இளம் பெற்றோருக்கு தாய்பாலின் மகத்துவம் குறித்தும், தாய்ப்பால் கொடுப்பதால் தங்களுக்கும் குழந்தை களுக்கும் கிடைக்கும் பலன்கள் குறித்தும் விரிவாக இந்த நிகழ்ச்சி மூலம் வலியுறுத்தி கூறப்பட்டது.
இது தொடர்புடைய பல்வேறு துறை களைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்ற அமர்வுகளும் நடைபெற்றன. இதன் காரண மாக தாய்ப்பாலூட்டுவது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்ட தோடு, முழு குடும்பத்தின் ஆரோக்கியத் திற்கும் நல்வாழ்வுக்கும் சிறந்ததொரு நிகழ்ச்சியாக இது அமைந்தது என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment