காரைக்கால், ஆக. 28- காரைக்கால் மாவட்டம், காரைக்கால் சுவாதி மஹாலில் நேற்று (27.08.2023) 35 மாணவர்களுடன் தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்று திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம் உரையாற்றினார். மாவட்ட தலைவர் குரு.கிருஷ்ணமூர்த்தி தலைமை யேற்று உரையாற்றினார்.
பொதுக்குழு உறுப்பினர் பதி.ஜெய்சங்கர் மாவட்ட இளைஞரணி செயலாளர் லூயிஸ் மாவட்ட காப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். கழக மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைத்து நடத்தினார். கழகசொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி Ôதந்தை பெரியார் ஒர் அறிமுகம்Õ என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார். பேராசிரியர் நம். சீனிவாசன் Ôதமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் சாதனைகள்Õ என்னும் தலைப்பில் வகுப்பெடுத்தார். திராவிடர் கழகத்துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் Ôபார்ப்பன பண்பாட்டு படையெடுப்புகள்Õ என்னும் தலைப்பில் வகுப்பெடுத்தார்.
No comments:
Post a Comment