சமையலில் பயன்படுத்தும் பாகற்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அவர்கள் விரும்பும் படி அதை எவ்வாறு சமைக்கலாம் மற்றும் அதில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
* பாகற்காயில் மிதிபாகல், கொடி பாகல் என இரண்டு வகைகள் உள்ளன. இரண்டும் ஒரே மாதிரி பலன்கள் தருகின்றன.
* பாகற்காய் வயிற்றில் உருவாகும் பூச்சிகளை அழித்துவிடும். குடல் புழுக்களை நீங்க வைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும்.
* கல்லீரல், கண்நோய், பக்கவாதம் ஆகிய நோய்களைக் கட்டுக்குள் வைக்கும்.
* தினமும் பாகற்காய் சாற்றோடு, சிறிது எலுமிச்சம்பழச்சாறு கலந்து அருந்தி வர, ரத்தம் சுத்தமாகும்.
* சொறி, சிரங்கு இருந்தால் ஆறிவிடும்.
* பாகற்காய் சாறு, தேன் சிறிது கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, ரத்த சோகை, காச நோய் கட்டுக்குள் வரும். நிவாரணம் கிடைக்கும்.
* பாகற்காய் சாற்றுடன் சிறிது வெந்தயம் சேர்த்து சாப்பிட்டுவர நீரிழிவு நோய் கட்டுப்படும்.
* இதை வில்லைகளாக நறுக்கி, காய வைத்துப் பொடித்து பாலில் கலந்து சாப்பிட்டால் நீரிழிவு பெருமளவு கட்டுப்படும்.
No comments:
Post a Comment