அனைத்துக் கட்சி கலந்துரையாடலில் சிதம்பரம் கோயிலை அரசு ஏற்கவேண்டும் என தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 9, 2023

அனைத்துக் கட்சி கலந்துரையாடலில் சிதம்பரம் கோயிலை அரசு ஏற்கவேண்டும் என தீர்மானம்

சிதம்பரம், ஆக. 9 - சிதம்பரம் நடராசர் கோயிலை அரசுடைமை ஆக்கக் கோரி , மேனாள் அறநிலையத் துறை அமைச்சர் வி. வி.சுவாமிநாதன் அவர்களின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையும், சிதம்பரத்தில் நடத்த வேண்டி 4.8.2023 வெள்ளி மாலை 5:00 மணிக்கு பெரு மாத் தெருவில் அனைத்துக் கட்சி கலந்துரையாடல் நடைபெற்றது.

சிதம்பரம் நகர் மன்ற மேனாள் தலைவரும், பாட்டாளி மக்கள் கட் சித் தலைவருமான வி.எம் .சந்திரபாண்டியன் தலை மையேற்றார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் முன்னிலையேற்றார். நிகழ்ச்சியை சிதம் பரம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங் கோவன் தொகுத்தளித்தார்.

நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செய லர் வி.எம்.சேகர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலர் இராஜா, வி.சி.க. மாவட்ட செயலர் அரங்க.தமிழ்ஒளி, வி.சி.க. மேனாள் மாவட்ட செயலர் பால அறவாழி, மேனாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சிவா. கண்ணதாசன், சீனுவா சன், மா.பெ.பொ.கட்சி மாவட்ட தலைவர் ப.மோகன் ஆகியோர் உரையாற்றினர். திராவிடர் கழகத்தின் சார்பில் யாழ்.திலீபன் பேசினார்.

சிதம்பரம் நகர கழக அமைப்பாளர் இரா.செல்வரத்தினம், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலர் அன்சாரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தீர்மானங்கள்:

சிதம்பரம் கோயிலை அரசு ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார் பில் சிதம்பரத்தில், தமி ழர் தலைவர் அறிவிக்கும் தேதியில் பிரமாண்ட மான ஆர்ப்பாட்டம் நடத்துவது. மேனாள் அறநிலையத் துறை அமைச்சர் மண்ணின் மைந்தர் வி.வி.சுவாமி நாதன் அவர்களின் 97ஆம் பிறந்த தின விழாவை அனைத்துக் கட்சி மாநி லத் தலைவர்களையும் அழைத்து சிறப்பாக நடத்துவதென தீர்மா னிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு இவ்வாண்டு “தகைசால் தமிழர் விருது” பெறப் போகும் தமிழர் தலை வருக்கு மிகச் சிறப்பாக பாராட்டு விழா நடத்துவது என்றும் - இம்மூன்றையும் இணைத்து முப் பெரும் விழாவாகக் கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. இறுதியில், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment