மருத்துவமனைக்கு உடற்கொடை
பொத்தனூர், ஆக. 24- நாமக்கல் மாவட்டம், பொத்தனூர் பெரியார் பெருந்தொண் டரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான சி.தங்கவேல் (வயது 86) வயது மூப்பின் காரண மாக 09-.8.-2023 அன்று மறைவுற்றார் என்பதை அறிந்து வருத்தமுற்றோம்.
ஆசிரியராக பணி யாற்றி ஓய்வு பெற்றாலும், அந்த பகுதியில் பகுத்த றிவு கருத்துகளைப் பரப் பியதோடு, சுயமரியாதை வீரராக இயக்க கூட்டங் களில் பங்கேற்க தவறாத வர்.
2010 ஆண்டே மருத்துவ மாணவர்களின் பயிற்சி, ஆய்விற்காக அரசு மருத் துவக் கல்லூரி உடற்கூறு பிரிவிற்கு, எனது உடலை அளித்திட வேண்டும் என்ற உறுதிமொழி பத் திரம் படி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத் துவமனைக்கு வழங்கப் பட்டது.
அவரது மறைவிற்கு பெரியார் அறக்கட்டளை தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தி அரவது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
உடல் தானம் செய்து மற்றவர்களுக்கும் வழிகாட்டுவது பெரியார் தொண்டர்களால் முடி யும் என்பதை பார்த்து நெகழ்ச்சியோடு குறிப் பிட்டனர்.
No comments:
Post a Comment