சென்னை, ஆக. 5- மகளிர் உதவித்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கை அஞ்சலகங்களிலும் தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண் காணிப்பாளர் மேஜர் மூ.மனோஜ் வெளியிட்ட அறிக்கை:
மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளி கள், நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டம், பிரத மரின் கிசான் மற்றும் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட திட் டங்களின் பயனாளிக ளுக்கு ஆதார் இணைப் புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம்.
இதற்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் கணக்கு தொடங் கலாம். அவ்வாறு தொடங் கப்படும் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை எதுவும் கிடையாது. அஞ்சல்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கைப்பேசி-பயோமெட்ரிக் சாதனத் தின் மூலம் பயனாளிகள் தங்களின் ஆதார் எண், கைப்பேசி எண் ஆகிய வற்றைக் கொண்டு விரல் ரேகை மூலம் சில நிமி டங்களில் கணக்கைத் தொடங்கலாம்.
மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமைத்தொகையை அருகில் உள்ள அஞ்சல கங்களில் அஞ்சல்காரர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment