குடந்தை, ஆக. 30- குடந்தை ஒன்றிய திராவிடர் கழகத்தின் துணைச் செயலாளர் க.மோகன் அவர்களது இணையர் மோ.லதா (வயது 43) 27-8-2023 அன்று அதிகாலை 5.00 மணியளவில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
இறுதி நிகழ்வுகள் மாலை திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம் ரோடு, மாரியம்மன் கோயில் அருகில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இறுதி நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் குடந்தை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி தலைமையில் தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகத் தின் காப்பாளர் தாராசுரம் வை.இளங்கோவன், மாவட்ட இளைஞரணி தலைவர் பொறியாளர் க. சிவக்குமார், மாநகர செயலாளர் வழக்குரைஞர் பீ. இரமேசு,. மாவட்ட திராவிடர் தொழிலாளர் அணியின் துணைத் தலைவர் குமாரமங்கலம் சங்கர், மாவட்ட மகளிர் அணியின் தலைவர் திரிபுர சுந்தரி மற்றும் ஏராளமான கழகத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வி.மோகன், தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தின் தலை வர் வழக்குரைஞர் சி. அமர்சிங் ஆகியோர் அலைபேசியில் அழைத்து இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொண்டனர்.
No comments:
Post a Comment