அனைத்து ஒன்றியம் - நகரப் பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் திருவாரூர் மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 21, 2023

அனைத்து ஒன்றியம் - நகரப் பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் திருவாரூர் மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துரையாடலில் முடிவு

திருவாரூர், ஆக. 21 - திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட் டம்  16.08.2023 அன்று காலை 10:00 மணி அளவில் திருவாரூர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமையில், மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராஜ், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் க.வீரையன், மாநில இளைஞரணி துணை செயலாளர் நாத்திக.பொன்முடி, ஆகியோர் முன்னிலையில்  தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ண மூர்த்தி கருத்துரை வழங்கினார். அவர் "திருவாரூர் ஒன்றியத்தில் 34 கிராம ஊராட்சி மன்றங்கள், குடவாசல் ஒன்றியத்தில் 49 கிராம ஊராட்சி மன்றங்கள், கொரடாச்சேரி ஒன்றியத்தில் 44. கிராம ஊராட்சி மன்றங்கள், நன்னிலம் ஒன்றியத்தில் 49 கிராம ஊராட்சி மன்றங்கள், திருத்துறைப்பூண்டி ஒன்றியத் தில் 32 கிராம ஊராட்சி மன் றங்கள், முத்துப் பேட்டை ஒன்றி யத்தில் 29 கிராம ஊராட்சி மன்றங்கள். இதில் எத்தனை கிளை கழகங்கள் உள்ளன என்ற விவரங்கள், திருவாரூர் மாவட் டத்தில் உள்ள தந்தை பெரியார் முழு உருவ சிலை, மார்பளவு சிலை, படிப்பகங்கள், மாவட்டம் முழுவதும் உள்ள கிளை கழகங்கள், உள்பட முகவரி மாற்றம் அலைபேசி எண்கள் குறித்தும் முறையான பட்டியல் தயாரிக் கப் பட வேண்டும்.அடுத்தது மாவட்ட மகளிரணி கலந்துரை யாடல் கூட்டமும், அதனை தொடர்ந்து நான்கு மாவட்ட  இளைஞரணி, மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டமும் நடைபெறுவதற்கான ஏற்பாடு கள் செய்ய வேண்டும் திராவிடர்  கழக இல்லம் என்பதற்கு அடையாளம் கழக கொடி மட்டும்தான். இல்லங்களில் கழகக் கொடியை கண்டிப்பாக வரும் செப்டம்பர் 17 அன்று பறக்க விட வேண்டும்" என்று தனது உரையில் குறிப் பிட்டார்.  

தீர்மானங்கள்

குடவாசல் ஒன்றிய துணைத் தலைவர் வில்லியநல்லூர் பெரியார் பெருந்தொண்டர் மா.மணி சேகரன், வடகுடி காம ராஜ், சூரனூர் சங்கர், அம்சவல்லி, அன்னவாசல் சந்திரா ஆகியோ ரது மறைவிற்கு இரங்கல் தெரி விக்கப்படுகிறது. 

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு “தகைசால் தமிழர்” விருது வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளையும், விருது பெற்ற “தமிழர் தலைவர்” ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஒன்றியம் மற்றும் நகர பகுதிகளில் தலா அய்ந்து தெருமுனைக் கூட்டங்களை வரும் செப்டம்பர் 17ஆம் தேதிக்குள் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது. 

திருவாரூர் கழக மாவட்டத் தில் உள்ள ஒன்றிய நகரங்களுக்கு கீழ்க்கண்டவர்கள் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்படுகின்ற னர்.

திருவாரூர் நகரம்: 

தலைவர்: கா.சிவராமன்

செயலாளர்: ப.ஆறுமுகம் 

துணைத் தலைவர்: சவு.சுரேஷ் 

துணைச் செயலாளர்: நா.துரைராஜ் 

குடவாசல் ஒன்றியம்

 தலைவர்: நா.ஜெயராமன்

 செயலாளர்: க.அசோக்ராஜ்

துணைத்தலைவர்: சி.அம்பேத்கர்

துணைச் செயலாளர்: 

பி.செல்வம் 

கொரடாச்சேரி ஒன்றியம்

 தலைவர்: சி.ஏகாம்பரம்

 செயலாளர்: மு.சரவணன்

துணைத்தலைவர்: ஜெ.வீரமணி

துணைச் செயலாளர்: கு.துரைராஜ்

 நன்னிலம் ஒன்றியம்

 தலைவர்: இரா.தன்ராஜ்

 செயலாளர்: சு.ஆறுமுகம்

துணைத் தலைவர்: க.கலிய பெருமாள்

 துணைச் செயலாளர்: சு.பொய்யாமொழி 

நன்னிலம் நகரம்

 தலைவர்: தன.சஞ்சீவி

 செயலாளர்: மு.சரவணன்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம்: மாவட்ட துணைத் தலைவர் கி.அருண் காந்தி, மாவட்ட விவசாய அணி செயலாளர் பி.ரத்தினசாமி, மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.சிவக் குமார், மாவட்ட துணை செய லாளர் கோ.ராமலிங்கம்,  கொர டாச்சேரி ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், பருத்தியூர் மு.சர வணன், குடவாசல் ஒன்றிய செய லாளர் சி.அம்பேத்கர், திருவா ரூர் ஒன்றிய தலைவர் கா.கவுத மன், ஒன்றிய துணைத் தலைவர் இரா.ராஜேந்திரன், திருவாதிரை மங்கலம் கோவிந்தசாமி, நன் னிலம் ஒன்றிய செயலாளர் இரா.தன்ராஜ்,  திருவாரூர் நகர தலைவர் சவு.சுரேஷ், செயலாளர் ப.ஆறுமுகம், அமைப்பாளர் கா. சிவராமன், கிடாரங்கொண் டான் அ.செல்வக்குமார், மற்றும் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment