காஞ்சிபுரம் ஆக.21 காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கவரை தெருவில் உள்ள கோவிலில் ஆடித் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி அம்மன் வீதி உலா இரவு 11 மணி அளவில் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண் டனர். அவர்கள் சாமி ஊர்வலத்தில் பின்தொடர்ந்து நடந்து சென்றனர். கோவில் விழாவை படம் பிடிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த ஒளிப்படகலைஞர் வெங்கடேசனை (வயது50) ஏற்பாடு செய்து இருந்தனர். அவர் அம்மன் வீதி உலா, பக்தர்கள் கூட்டத்தை படம் பிடித்தபடி சென்றார். அப்போது சாலையில் எதிரே வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் ஒளிப்பட கலைஞர் வெங்கடேசன் மற்றும் சாமி தரிசனம் செய்தவர்கள் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள், இசைக்கலை ஞர்கள் மீது கார் பயங்கரமாக மோதி நின்றது. இதில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒளிப்பட கலைஞர் வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். மேலும் 15 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவிலில் ஆடி மாத திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment