மேலும், சுடுமண்ணால் செய்யப் பட்ட வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளது. இரும்பு ஆணி, கருப்பு-சிவப்பு நிறப் பாணை ஓடுகள் உள்ளிட்ட பொருள்கள் அகழாய்வில் கண்டெடுக் கப்பட்டுள்ளது.
கீழடியில் நடைபெற்று வரும் 9-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க அணிகலன், சுடுமண் விலங்கின உருவங் கள், கண்ணாடி மணிகள், எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனைகள் உள்பட பல தொல் பொருள்கள் கண்டறியப் பட்டன.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த ஏப்ரல் 6 -ஆம் தேதி முதல் 9 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதற்காக 9 குழி கள் தோண்டப்பட்டு, அகழாய்வு மேற்கொள்ளப்பட்டதில் தங்க அணி கலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கின உருவங்கள், தக்களிகள், ஆட்டக் காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், அஞ்சனக் கோல் கள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப் பட்ட கூர்முனைகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள் என பல பொருள்கள் இதுவரை வெளிக் கொணரப்பட்டுள்ளன.
மேலும், வெவ்வேறு நிலையிலிருந்த எலும்பு, கரி மாதிரிகள் அறிவியல் பகுப்பாய்வுக்காக சேகரிக்கப்பட் டுள்ளன.
No comments:
Post a Comment