மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் பிராட்லா உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 22, 2023

மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் பிராட்லா உரை

புதுக்கோட்டை, ஆக. 22- புதுக் கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் பகுத்தறி வாளர் கழகத்தின் சார் பில் நரேந்திர தபோல்கர் நினைவுநாளை முன் னிட்டு விளக்க தெரு முனைக் கூட்டம் நடை பெற்றது.

பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் அ.தர்மசேகர் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் தி.குண சேகரன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அ.சரவணன், ப.க. மாவட் டச் செயலாளர் வெள் ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகரத் தலைவர் சு.கண் ணன், நகர செயலாளர் ரெ.மு.தருமராசு, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் தி.பொன் மதி, மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் இரா. யோகராசு, புதுக் கோட்டை ஒன்றியச் செய லாளர் சாமி.இளங்கோ, ம.மு.கண்ணன் உள்ளிட்ட தோழர்களும் கலந்து கொண்டனர்.

கழகப் பேச்சாளர் தி. என்னாரெசு பிராட்லா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசு கையில் “பகுத்தறிவு அமைப்பை நடத்தி வந்த நரேந்திர தபோல்கரைப் பற்றி நமது தமிழ்நாட்டில் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதே நேரத் தில் அவர் இறந்தபிறகு அவரது மகன் அந்த அமைப்பை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். பகுத்தறிவாளர் கழகத் தின் நோக்கமே மக்களின் மத்தியில் பரவிக் கிடக்கும் அறியாமை என்ற இரு ளைப் போக்க வேண்டும், மூட நம்பிக்கைக் கருத்து களை உடைக்க வேண்டும் என்பதோடு மாணவ-மாணவியர் மத்தியில் இருக்கும் ஜாதி, மத நம்பிக்கையைப் போக்கி அறிவியல் மனப்பான்மை யையும் மனித நேயத்தை யும் வளர்க்க வேண்டும் என்பதைக் கொள்கை யாகக் கொண்டு செயல் பட்டு வருகிறது.

அதன் வழியாகத்தான் இப்போது நரேந்திர தபோல்கர் மறைவு நாளான ஆகஸ்ட் 20ஆம் தேதியை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை யில் இங்கும், சென்னை யில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சிறப்புரையிலும் விளக் கக் கூட்டம் நடைபெறு கிறது. ஒரு வார காலத் திற்கு தமிழ்நாடு முழுவ தும் பிரச்சாரக் கூட்டங் கள் நடைபெறுகிறது. இவ் வாறு அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment