குழந்தைகள் கடத்தல் அதிகமாக உள்ள மாநிலங்கள் ஆய்வுத் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

குழந்தைகள் கடத்தல் அதிகமாக உள்ள மாநிலங்கள் ஆய்வுத் தகவல்

புதுடில்லி, ஆக.3  இந்தியாவில் குழந்தைகள் கடத்தலில் உத்தரப்பிரதேசம், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. கேம்ஸ் 24ஜ்7 மற்றும் கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக் கட்டளை ஆகியவை இணைந்து ‘இந்தி யாவில் குழந்தைகள் கடத்தல்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டன. இந்தஆய்வின் அறிக்கை, ஆட்கடத்தலுக்கு எதிரான பன்னாட்டு நாளை முன்னிட்டு 30.7.2023 அன்று வெளியிடப் பட்டது. 

அதில் கூறியிருப்பதாவது: நாடு முழு வதும் 21 மாநிலங்களில் 262 மாவட்டங்களில் 2016 முதல் 2022 வரையில் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சேகரிக்கப் பட்டன. இதன்படி குழந்தைகள் கடத்தலில் உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகியவை முதல் 3 இடங் களைப் பிடித்துள்ளன.

டில்லியைப் பொறுத்தவரை கரோனா காலத்துக்கு முன்பு இருந்ததைவிட இப் போது குழந்தைகள் கடத்தல் 68 சதவீதம் அதிகரித் துள்ளது. குழந்தைகள் கடத்தல் அதிகமாக உள்ள நகரங்களில் ஜெய்ப்பூர் முதலிடத்தில் உள்ளது. இந்த காலகட்டத் தில் 18 வயதுக் குட்பட்ட 13,549 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 80 சதவீதம் பேர் 13 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள். 13 சத வீதம் பேர் 9 முதல் 12 வயதுக் குட்பட்டவர்கள். 2 சதவீதம் பேர் 9 வயதுக் குட்பட்டவர்கள் ஆவர். பல்வேறு துறைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருப் பதும் இந்த ஆய் வில் தெரியவந்துள்ளது. 

இதில் உணவு விடுதிகள் மற்றும் தாபாக்களில் அதிக அளவில் (15.6%) குழந்தை தொழி லாளர்கள் உள்ளனர். அடுத்தபடியாக வாக னங்கள் அல்லது போக்குவரத்துத் துறையும் (13%), ஆடை உற்பத்தித் துறையும் (11.18%) அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர்களை பணிய மர்த்தி உள்ளது தெரியவந்துள்ளது. 

அதே நேரம், குழந்தைகள் கடத்தலை தடுக்க ஒன்றிய, மாநிலஅரசுகள் பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, குழந்தை கடத்தல் தொடர்பான விழிப்பு ணர்வு பிரச்சாரங்கள் நடத்துவதன் மூலம், இது தொடர்பான தகவல் வெளிவருவதுடன் கடத்தல் நிகழ்வு குறைந் துள்ளன. அதே நேரம், குழந்தைகள் கடத்தலைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த சட்டம் கொண்டு வர வேண்டியதும் அவசியமாகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment