கிருஷ்ணகிரி: பெரியார் மன்றம் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்கும் நிகழ்வில் அரூர் கழக மாவட்டத்திலிருந்து பெருந்திரளாக தோழர்கள் கலந்துகொள்ள முடிவு!அரூர், ஆக.7 கிருஷ்ணகிரி: பெரியார் மன்றம் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்கும் நிகழ்வில் அரூர் கழக மாவட்டத்திலிருந்து பெருந்திரளாக தோழர்கள் கலந்துகொள்ள கடத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரை யாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரூர் கழக மாவட்டம் கடத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 5.8.2023 சனிக்கிழமை காலை 11 மணி யளவில் தேக்கல்நாயக்கன்பட்டியில் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி செயலாளர்
மு. பிரபாகரன் இல்லத்தில் நடைபெற்றது.
ஒன்றிய கழகத் தலைவர் பெ.சிவலிங்கம் தலைமையில், ஒன்றிய செயலாளர் பெ.தன சேகரன் வரவேற்புரையாற்றினார். ஊற்றங் கரை ஒன்றிய செயலாளர் சிவராசன் கடவுள் மறுப்பு கூறினார்.
மாவட்ட கழக தலைவர் கு.தங்கராஜ், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அணி செயலாளர் மு. பிர பாகரன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ. அன்பழகன், செயலாளர் சோ.பாண்டியன், அமைப்பாளர் குபேந்திரன், வாசகர் வட்ட தலைவர் நடராஜன், கடத்தூர் நகர செயலாளர் இரா.நெடுமிடல், ஆகியோர் முன்னிலை ஏற்று கருத்துரையாற்றினர்.
தகைசால் தமிழர் விருது பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை பாராட்டியும், விருது அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கூறி, தந்தை பெரியார் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, கழக அமைப்பு களை உருவாக்குவது, கழகக் கொடியேற்றுவது குறித்து நிறைவாக தலைமை கழக அமைப் பாளர் பழ. பிரபு சிறப்புரையாற்றினார். நிகழ்ச் சியை கழக காப்பாளர் அ தமிழ்ச்செல்வன் ஒருங்கிணைத்து நடத்தினார்.
90 ஆண்டு கால வாழ்வில் தமிழரின் வாழ்வின் மேம்பாட்டிற்காகவும், சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, பகுத்தறிவுப் பணியில் தந்தை பெரியாருக்கு பின் தொடர்ந்து 80 ஆண்டு காலம் பணியாற்றிவரும் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும், தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சி சாதனையாளர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தகைசால் தமிழர் விருது வழங் குவதாக அறிவித்துள்ளமைக்கு வாழ்த்தும் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கையின் படி ஒன்றியம் தோறும் கிளைக் கழகங் களை அமைப்பது, தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது, உறுப்பினர் சேர்க்கை, விடுதலை சந்தா சேர்ந்த சேர்ப்பு பணிகளை செயல்படுத் துவது, அரசு போக்குவரத்து கழக பேருந்து களில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், கல்வி வள்ளல் காமராசர், முத்தமிழ் அறிஞர் கலைஞர், போன்ற தலைவர்களின் பொன் மொழியை எழுதிட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப் பட்டது.
விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் வாசகர்களை உருவாக்குவது, கருத்தரங்கம் நடத்துவது, ‘விடுதலை' சந்தா சேர்ப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள முடிவு. தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கிராமங்கள் தோறும் கொடியேற்றி, இனிப்பு வழங்கி, தந்தை பெரியார் படங்களுக்கு மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடுவது எனவும், ஆகஸ்ட் 25ஆம் தேதி கிருஷ்ண கிரியில் பெரியார் மன்றம் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்கும் நிகழ்வில் அரூர் கழக மாவட்டத்திலிருந்து பெருந்திரளாக தோழர்கள் கலந்து கொள்வதெனவும், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை பாப்பிரெட்டிபட்டியில் சிறப்பாக நடத்துவதெனவும், ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட மாணவர் கழக செயலாளராகவும் பிறகு மண்டல மாணவர் கழக செயலாளராக வும்,தற்போது அரூர் மாவட்ட மாணவர் கழகத் தலைவராக சிறப்பாக பணியாற்றிய வேப் பிலைப்பட்டி இ.சமரசம் டிஎன்பிஎஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனம் செய் யப்பட்டமைக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வ தெனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடத்தூர் நகர தலைவர் சுப. மாரிமுத்து, செயலாளர் இரா.நெடுமிடல் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
கலந்துரையாடல் கூட்டத்தில் சீனி முத்து ராஜசேகரன், அமைப்பாளர் ஜி.முருகன், செந் தில்குமார், சிந்தல்பாடி பச்சையப்பன், இளை ஞரணி பிரதாப், வேப்பிலைப்பட்டி பெரியார், சூரியா, பவுத்த அறநிலையர் சங்க தம்மச்சுடர் கணபதி, ரேவதி, செந்தமிழ் செல்வன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர் கொ.கண்ணப்பர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment