திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான பேச்சுப் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 19, 2023

திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான பேச்சுப் போட்டி

மறைந்து ஏறக்குறைய அய்ம்பது ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் தமிழ் நாட்டு அரசியலின் மய்யப் புள்ளியாக, இணைய தளங்களில் பாலின வேறு பாடின்றி இளைஞர்களின் பேசு பொரு ளாக கருத்துருவாக்கம் பெற்று உலக மயமாகிக் கொண்டிருக்கும் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்தநாளை (17.9.2023) முன்னிட்டு திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான பேச்சுப் போட்டி - பள்ளி மாணவர்களுக்கும் (10 ஆம் வகுப்பு, +1 & +2 வகுப்புகள்), கல்லூரி மாணவர்களுக்கும் - அனைத்து பாலினத்தவருக்கும்.

பிரிவு 1: வயது 15 முதல் - 17 வரை

தலைப்புகள்:

1. பெரியார் பேணிய மனிதநேயம்

2. கல்வியில் சிறந்த தமிழ்நாடு

3. சமத்துவமே திராவிடம்

பிரிவு 2: வயது 18 முதல் - 30 வரை

தலைப்புகள்:

1. திராவிடர் இயக்கமும் சமூகநீதியும்

2. இந்தியாவா? பாரதமா?

3. பாசிசம் வீழட்டும்

இரு பிரிவினரும் மேலே கொடுக்கப் பட்டுள்ள அவரவர்க்கான தலைப்புக ளில் ஏதாவது ஒரு தலைப்பில் பேசலாம்.

1. கீழ்க்கண்ட இணைப்பில் கொடுக் கப்பட்டுள்ளgoogle sheet- இல் பதிவு செய்ய வேண்டும். https://forms.gle/zfmEjNVxtqnyUVpz8

2. பதிவுக் கட்டணம் கிடையாது.

3. பேச்சுப் போட்டிகள் வரும் 02.09.2023 (சனிக்கிழமை) & 03.09.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாள்களில் காணொலி வழியாக நடைபெறும்.  

4. பங்கேற்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தகுதிச் சுற்றும் செப்டம்பர் இரண்டாம் வாரத் தில் நடைபெறும்.

5. ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள் வழங்கப்படும். 

முதல் பரிசு ரூ. 2500/-, இரண்டாம் பரிசு ரூ.2000/-, மூன்றாம் பரிசு ரூ. 1500/-

6. பதிவு செய்யக் கடைசி நாள் : 30.08.2023 (செவ்வாய்க்கிழமை)

7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

அய்யங்களுக்கு கீழ்க்கண்ட எண் களை வாட்ஸ்அப்பில் மட்டுமே தொடர்பு கொள்ளவும்.

ச.இன்பக்கனி  : 7358959157

சே.மெ.மதிவதனி        : 9791835376

தகடூர் தமிழ்ச்செல்வி  : 9486101676

பா.மணியம்மை             : 9176488957

Google Link:

https://forms.gle/zfmEjNVxtqnyUVpz8

No comments:

Post a Comment