சமையல் எரிவாயு உருளை வெடித்து பக்தர்கள் மரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 27, 2023

சமையல் எரிவாயு உருளை வெடித்து பக்தர்கள் மரணம்

 மூட நம்பிக்கைக்கு பக்தர்கள் 9 பேர் பலி
வெளியில் உணவுகளை வாங்கி சாப்பிட்டால் தீட்டுப்பட்டு விடுமாம்!
 பக்தியின் புத்தியால் ரயிலில் உணவு சமைத்தனர் 
சமையல் எரிவாயு உருளை வெடித்து பக்தர்கள் மரணம் 

மதுரை, ஆக.27  பக்திப் பயணம் செய்தவர்கள் ரயிலில் உணவு சமைத்ததால் சிலிண்டர் வெடித்து 9 பேர் மரணம் மதுரையில் நடந்துள்ளது. வெளியில் உணவு வாங்கி சாப்பிட்டால் தீட்டுப்பட்டு விடும் என்பதுதான் இதற்குக் காரணமாம்.

கோவில் கோவிலாக சென்று பார்க்க சிறப்பு ரயிலில் வந்தவர்கள் வெளியே உணவுப் பொருட்கள் வாங்கிச்சாப்பிட்டால் தீட்டாகிவிடும் என்று கருதி ரயிலிலேயே உணவு சமைத்த போது சிலிண்டர் வெடித்து ஒரு பெட்டி முழுவதும் எரிந்து தீக்கிரை யானது, அதில் இதுவரை 9 பேர் கருகி மரணமடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மீக சுற்றுலா செல்லும் பயணி களை ஏற்றிக் கொண்டு ரயிலில் இணைக்கப் பட்ட  பெட்டி கடந்த 17-ஆம் தேதி தமிழ்நாடு வந்தடைந்தது. நாகர்கோவிலுக்குச் சென்ற பயணிகள் அங்கிருந்து  மதுரைக்குத் திரும்பியுள்ளனர். சுற்றுலாவுக்கு பயணிகளை ஏற்றி வந்த ரயிலானது, மதுரை  ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள மதுரை _ போடி லைன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ரயில் பெட்டியில் திடீ ரென தீப்பற்றி எரிந்தது. அது மளமளவென பற்றி எரிந்து  பரவியது. அப்போது,   சிறப்பு முன்பதிவு ரயில் பெட் டியில் 90 பேர் இருந்துள்ளனர். தீ விபத்து பற்றி அறிந்ததும் 60-க்கும் மேற்பட்டோர் கீழே குதித்து தப்பியுள்ளனர்.

எனினும், இந்த தீ விபத்தில் முதலில் 2 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியானது. பின்னர் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. பலருக்கு காயம் ஏற்பட்டது.  தீ விபத்து, அதன் தொடர்ச்சியாக எழுந்த புகையால் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்தில் உயிரிழந்த வர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து "சாமி தரிசனம்" செய்ய வந்தவர்கள் ஆவார்கள். இந்த நிலையில், பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது பற்றி அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அந்த ரயில், அதிகாலை 3.47 மணிக்கு புனலூரில் இருந்து மதுரை வந்து சேர்ந்தது. இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டது பற்றி காலை 5.20 மணிக்கு தீயணைப்பு துறைக்கு ரயில்வே துறை தகவல் தெரிவித்தது.

நிகழ்விடப்பகுதிக்கு காலை 5.45 மணிக்கு தீயணைப்பு வாகனங்கள் சென்றன. தீய ணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக் கும் பணியில் ஈடுபட்டனர். காலை 7.15 மணிக்கு ரயிலில் பற்றி எரிந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் பெண்கள். 5 பேர் ஆண்கள். ஒருவர் அடையாளம் காண முடி யாத அளவுக்கு உள்ளார். தீ விபத்து ஏற்பட்ட போது, ரயில் பெட்டியின் கதவுகள் மூடப்பட்டு இருந்துள்ளது. இதனால், பலர் உடனடியாக தப்பிக்க முடியாமல் போனது என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

ரயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் சிலர் காலையில் காபி குடிப்பதற்காக எரிவாயு உருளையை பயன்படுத்தி சமைக்க முயன் றுள்ளனர். அப்போது திடீரென சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. கோவில்சுற்றுலா வந்தவர்கள்ரயிலில் இருந்து கீழே இறங்கி ஓடியுள்ளனர். எனினும், சிலர் ரயில் பெட்டியில் சிக்கிக் கொண்டனர்.   இதனால், அந்த பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது. 

உயிரிழந்தவர்களின் 

உறவினர்கள் கதறினர்

தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரயில்வே அதிகாரிகள், மருத்துவக் குழுவினர், பாதுகாப்புப் படையினர், வருவாய் துறையினர் செயல்பாட்டால் தீயை அணைக்கும் பணி முழுமையடைந்து உள்ளது. அந்த ரயில் பெட்டி தனியாக கொண்டு செல்லப்பட்டு உள்ளது.  இதில், 10 பேரின் உடல்கள் மீட்கப் பட்டு உள்ளன. இதுபற்றி மதுரை ஆட்சியர் சங்கீதா நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டார்.

இந்த ரயில் பெட்டியில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, மற்றொரு ரயில் அந்த பகுதியை கடந்து சென்றது. ரயிலில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை ஏற்றி செல்ல அனுமதி இல்லாத நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'ஆன்மீக சுற்றுலா' என்ற பெயரில் வரும் இது போன்ற சிறப்பு ரயிலில் வருபவர்கள் கோவில்களுக்குச் செல்வதால் ஆச்சாரம் பார்ப்பார்கள், கடைகளில் உணவு வாங்கி சாப்பிடுவது, தேநீர் உள்ளிட்டவைகள் குடிப்பது அவர்களின் விரதத்திற்கு தீட்டு ஆகி விடும் என்று அவர்களே ரொட்டி, உள்ளிட்ட உணவு வகைகள் சமைத்து சாப்பிடுவார்கள்

 பள்ளி மாணவர்களுக்கு புராஜக்ட் செய்ய சதுர வடிவில் இருக்கும் தெர்மாக் கோல் கொண்டு சென்றாலே ரூ.5000 அபராதம் வசூலிக்கும் ரயில்வே நிர்வாகம் தீட்டுப் பார்த்து எரிவாயு உருளை, சமையல் பொருட்கள் உள்ளிட்டவைகளை கொண்டு வரும் இந்த ஆன்மீகப் பார்ப்பனர்களுக்கு முழு விலக்கு அளித்துவிடுவார்கள். 

 ரயில்வே பாதுகாப்பாளர்களும், இதர பணியாளர்களும் இவர்களிடம் வாங்கிச் சாப்பிடுவதை "புண்ணியமாக" கருதும் கேவலமும் வட இந்தியாவில் அரங்கேறும்.  

மதுரையில் நடந்தது

 பொதுவாக தமிழ் நாட்டிற்கு வரும் வட இந்திய ஆன்மீக பயணிகள் அதிகம் தீட்டு பார்ப்பார்கள், தேநீர் வாங்குவது முதல் சிற்றுண்டி வரை வாங்க பெரிதும் யோசிப்பார்கள். மதுரை கோவில் வீதிகளில் நூற்றுக்கணக்கான கடைகள் இருந்தாலும் பார்ப்பனர்கள் நடத்தும் சந்துக்குள் இருக்கும் கடைகளைத் தேடிச் செல்வார்கள்.இவர்கள் பிச்சைப் போடுவதற்கு கூட தயாராக இருக்கமாட்டார்கள். காரணம் "பிச்சை போட்டால் பிச்சை எடுப்பவர்களின் தரித்திரம் பிடித்துக்கொள்ளும் என்று சாஸ்திரத்தில் உள்ளதாக" கூறுவார்கள். அதே நேரத்தில் பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்த ஏழைப் பார்ப்பனர்கள் என்ற பெயரில் வருபவர்களுக்கு வேட்டி, சேலை, பாத்திரம், பணம் போன்றவைகளைத் தருவார்கள். ராமேசுவரம் போன்ற பகுதிகளில் பசு மாட்டையும் "தானமாக" தருவார்கள்.

 முதலில் ஸ்டவ் கொண்டுவருவார்கள். தற்போது கைகளில் தூக்கிச்செல்லும் சமை யல் எரி வாயு உருளை அடுப்புகளைக் கொண்டு  வருகிறார்கள்.    

இது பாதுகாப் பற்றது என்றும், இதனை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்ட நிலையில் இதனை ரயிலில் கொண்டு வந் துள்ளார்கள். இதுதான் தற்போது விபத் திற்கு காரணமாகி உள்ளது.

No comments:

Post a Comment