கோவை, ஆக. 7- கோவையில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் 174 செங்கல் சூளைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார். கோவை - கவுண்டம்பாளையம் பகுதியில் கோவை முத்தரையர் நலச் சங்கத்தின் 21 ஆம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சர் சிவ. வீ.மெய் யநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாண விகளுக்குப் பரிசுகளை வழங்கினார் இதைத் தொடர்ந்து, அவர் செய் தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த 174 செங்கல் சூளைகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மூலம் கடந்த காலத்தில் மூடப்பட்டன. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவ னத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் 174 செங்கல் சூளைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்குவாரிகளில் வெடிவைப்பது தொடர்பாக தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகிறது.
காவிரி, தாமிரபரணி, வைகை போன்ற ஆறுகளைப் பாதுகாப் பதற்கான நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளன. ‘நடந்தாய் வாழி காவிரி’ என்ற திட்டத்தின் மூலம் காவிரி ஆற்றைப் புனரமைக்க 10 பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஒன்றிய அரசுக்கு ரூ.1,885 கோடி மதிப்பில் கருத்துருக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
சாயக் கழிவுகளை ஆற்றில் கலக்கும் பட்டறைகளை மூடுவதற் கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், சிறப்புக் குழு அமைத்து ஆற்றில் சாயக் கழிவுகள் கலப் பதைக் கண்காணித்து வருகிறோம். நீர்நிலைகளில் சாயக் கழிவுகளைக் கலப்பது தாய்ப்பாலில் விஷத்தைக் கலப்பது போன்றது. எனவே, நீர் நிலைகளில் கழிவுப் பொருள் களைக் கலக்காமல் அனைவரும் தொழில்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment