குழந்தையை விற்ற செல்போன் போதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 1, 2023

குழந்தையை விற்ற செல்போன் போதை

"தாய் பாசத்திற்கு ஈடாகுமா"? "தந்தையைப் போல் தியாகி உண்டா"? "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்றெல்லாம் முழங்கப்படும் நாட்டில் தான் இந்த சம்பவம் நடை பெற்று உள்ளது.

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்கா நகர் பனிஹத்திபகுதியில் ஒரு தம்பதி 8 மாத ஆண் குழந்தையுடன் வசித்து வந்தனர். திடீரென குழந்தை இல்லாமல் அவர்கள் இருவர் மட்டும் பல இடங்களில் மகிழ்ச்சியாகத் சுற்றித் திரிவதை கண்ட அந்தப் பகுதி பொது மக்களுக்கு சந்தேகம் எழுந்தது.காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.கணவன் தலை மறைவானான். இளம் பெண்ணை பிடித்து உரிய முறையில் காவல்துறையினர் விசாரித்தனர்.விசாரணையில் பணத்திற்காக தங்களது குழந்தையை  விற்றதும் அந்தப் பணத்தை கொண்டு  iphone 14 என்ற நவீன அலைபேசி வாங்கி பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வீடியோ எடுத்து "ரீல்ஸ்" வெளி யிட்டு மகிழ்ந்தார்களாம்.

(செய்தி "தினத்தந்தி " 29.7.2023).

செல்போன் போதை தலைக்கு ஏறியதும் வீடியோ எடுக்கிறேன் பேர் வழி என்று மலை உச்சிக்கு சென்று கவிழ்வதும், அருவிகளுக்கு சென்று வழுக்கி விழுந்து உயிரை மாய்த்துக், கொள்ளுவதும், ஆபத்தான விளையாட்டு களில் ஈடுபட்டு உயிரைப் போக்கிக் கொள்வ தும் இப்போ தெல்லாம் அடிக்கடி நடக்கிறது. செல்போன் போதை தலைக்கு ஏறி பிள்ளையை கூட விற்கும் போக்கு ஆபத்தானதல்லவா?

நாட்டைப் பிடித்துள்ள "அய்ந்து நோய்கள்" பார்ப்பான், பத்திரிகை, சட்ட சபை, தேர்தல் ,சினிமா என்றார். அறிவாசான் தந்தை பெரியார். ஆறாவது "நோயாக"  செல்போனை சேர்க்க லாமோ? 

- க. சிந்தனைச் செல்வன், அரியலூர்


No comments:

Post a Comment