இம்பால், ஆக. 7- மணிப்பூரில் உள்ள விஷ்ணுபூர் -சூர சந்த்பூர் எல்லையில் 5.8.2023 அன்று ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர், 16 பேர் காயம் அடைந்தனர்.
மணிப்பூரில் பெரும் பான்மையாக உள்ளமைத்தேயி இனத்தவர் பழங்குடியினர் தகுதி கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இதுதொடர்பான வழக்கில் அவர்களுக்கு பழங்குடியினர் தகுதி வழங்க உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதை எதிர்த்து குகி இனத்தவர்கள் கடந்த மே 3ஆம் தேதி பேரணி நடத்தினர். அதில் ஏற்பட்ட மோதல் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்து சற்று ஓய்ந் திருந்தது.
இந்நிலையில் விஷ்ணு பூர்-சூரசந்த்பூர் எல்லையில் உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மீண்டும் கலவரம் ஏற்பட்டது. நிவாரண முகாம்களில் தங்கியிருந்த சிலர்தங்கள் வீடுகளை பாதுகாப்பதற் காக விஷ்ணுபூர் மாவட்டத்தின் உகா தம்பக் கிராமத்துக்கு திரும்பி னர். இங்கு நேற்று முன் தினம் அதிகாலை 2 மணியளவில் நுழைந்த தீவிர வாதிகள் சிலர் தந்தை-மகன் உட்பட 3 பேரை சுட்டுக் கொன்றனர்.
இதற்கு பதிலடி கொடுப்பதற்காக சிலர் ஆயுதங்களுடன் சூரசந்த் பூர் மாவட்டத்தில் உள்ள பூஜாங்க் மற்றும் சாங்டோ கிராமத்துக் குள் புகுந்து சிறிய ரக ராக்கெட் குண்டுகள் மற்றும் கையெறி குண்டு களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர், சிலர் காயம் அடைந்தனர்.
அதே நேரத்தில் விஷ்ணு மாவட்டத்தின் தேரகோங்சாங்பி பகுதி யில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். காவலர் ஒருவர் உட்பட 3 பேர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந் தனர்.
இதேபோல் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் இரு கிராமங்களிலும் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூட் டில் ஈடுபட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற் படவில்லை. இம்பால் மேற்கு மாவட்டத்தின் லாங்கோல் பகுதியில் சில வீடுகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர்.
மணிப்பூரில் தீவிரவாத தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் இம்பாலில் போராட்டங்களும் நடந் தன. மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித் துள்ளதை அடுத்து, பாது காப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் குண்டு காயத்து டன் கைது செய்யப்பட் டார். மணிப்பூருக்கு மேலும் 10 கம்பெனி பாதுகாப்புப் படையினரை அனுப்ப ஒன்றிய அரசு முடிவு செய்துள் ளது.
மணிப்பூரில் ஆளும் பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, குக்கி மக்கள் கூட்டணிக் கட்சி தலைவர் டோங்மங் ஹவோகிப் ஆளுநர் அனு சுயா உய்கேக்கு கடிதம் அனுப்பி உள்ளார். குக்கி மக்கள் கூட்டணிக்கு 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதால், ஆதரவை திரும்பப் பெற்றாலும் மணிப்பூர் அர சுக்கு ஆபத்து இல்லை என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment