நாச்சியார் கோவில், ஆக. 9 - திருவிடைமருதூர் ஒன்றியம் - நாச்சியார் கோவிலில் வைக்கம் நூற்றாண்டு விழா- மற்றும் முத்தமிழ றிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் திராவிடர் கழ கத்தின் சார்பில் திருவிடை மருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குமாரமங்கலம் அ. சங்கர் தலைமையில் 4.8.2023 மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு குடந்தை மாவட்ட கழகத்தின் தலைவர் வழக்குரைஞர் கு. நிம்மதி, குடந்தை மாநகர கழகத்தின் செயலாளர் வழக்குரைஞர் பீ.ரமேஷ் திருவிடைமருதூர் ஒன் றிய அமைப்பாளர் நா.சிவகுமார் பவுண்டரிபுரம் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.
தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க. குருசாமி துவக்க உரை நிகழ்த்தினார்.
திராவிடர் கழக பகுத் தறிவு கிராம பிரச்சார குழு அமைப்பாளரும், கழக பேச்சாளருமான முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி தலைவர் திரிபுர சுந்தரி, மாநகர கழக மகளிர் அணி செயலாளர் அம்பிகா, மாவட்ட பகுத் தறிவு பாசறை செயலா ளர் அறிவுமணி முருகே சன், நாச்சியார் கோவில் வே குணசேகரன், குட வாசல் தோழர் மாஸ்டர் ராஜா, நாச்சியார் கோவில் மகளிரணி பொறுப்பா ளர் கமலா கலியமூர்த்தி, மாணவர் கழக அமைப் பாளர் வே.செந்தமிழன், மாவட்ட திராவிடர் கழகத்தின் இளைஞரணி தலைவர் பொறியாளர் க. சிவக்குமார், நாச்சியார் கோவில் நகர பொறுப் பாளர் மணிகண்டன், ஆகி யோர் கலந்துகொண்டனர்.
திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத் தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment