நாகர்கோவில், ஆக. 22- நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டத்தில் மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்து உரையாற்றி னார். பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், பகுத் தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ் ஆகியோர் முன் னிலை வகித்து உரையாற்றினர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். பகுத்தறி வாளர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் தாஸ், அமைப்பாளர் இரா.லிங்கேசன், மாநகர கழக செயலாளர் மு.இராஜசேகர், துணைத் தலைவர் கவிஞர் ஹ. செய்க்முகமது, கழகத் தோழர்கள் மு.குமரிச் செல்வன் கு.சந்திரன், செல்லையா மற்றும் பலரும் பங் கேற்றனர். மாவட்ட கழக இளை ஞரணி செயலாளர் எஸ்.அலெக் சாண்டர் நன்றி கூறினார்.
தமிழர் தலைவருக்கு விருது வழங்கி சிறப்பித்த தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கு நன்றியை யும், பாராட்டையும் தெரிவிப்பது, நீட் தேர்வு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை ஆகஸ்ட் 22 அன்று நாகர்கோவிலில் கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பாக நடத்துவது,
தந்தை பெரியாருடைய 145 ஆவது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவது, பெரியார் படம் அமைத்து மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடு வது, 23.9.2023 அன்று ஒருநாள் பெரியாரியல் பயிற்சி முகாமை சிறப்பாக நடத்துவது எனவும், விஸ்வ கர்மா திட்டம் என்ற பெயரில் குலக்கல்வித்திட்டத்தை கொண்டுவரும் மோடி அரசை இக் கூட்டம் வன்மையாகக் கண் டிப்பது, திருவட்டார் அருவிக்கரை பகுதியில் தந்தை பெரியார் படத்தை சேதப்படுத்திய விஷமி களை கண்டிப்பதோடு, அவர்களை கைது செய்ய காவல்துறை நட வடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment