மீன்பிடி தடைக்கால உதவித்தொகை உயர்வு: அரசாணை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 30, 2023

மீன்பிடி தடைக்கால உதவித்தொகை உயர்வு: அரசாணை வெளியீடு

சென்னை, ஆக. 30 -  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கடல் மீன்வளத்தைப் பேணிக் காத்திட 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களின் துயரி னைக் களைந்திட 14 கடலோர மாவட்டங்க ளிலும் உள்ள கடலோர மீனவ குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 - வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரண மாக அரசு வழங்கி வருகிறது.

அத்தொகையினை உயர்த்தி வழங்கிடக் கோரி பல்வேறு மீனவர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளிடமிருந்து தொடர்ந்து கோரிக் கைகள் பெறப்பட்டு வந்த நிலையில், மீனவ குடும்பங்களின் கோரிக்கையினை ஏற்று, அவர்களின் துயரினை போக்கிடும் வகையில் 18.08.2023 அன்று ராம நாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில்  தமிழ்நாடுமுதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், 2024_-2025ஆம் ஆண்டு முதல் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை ரூ.5000-லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கிட அறிவிப்பினை வெளியிட் டுள்ளார்.

அவ்வறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக 22.08.2023 அன்று அர சாணை வெளியிடப்பட் டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1,79,000 கடலோர மீனவ குடும்பங்கள் பயன் பெறுவார்கள், என்று அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment