புதுடில்லி, ஆக. 4 - டில்லி யூனியன் பிரதேச அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் புதிய சட்டமசோதா மக்கள வையில் இன்று நிறை வேற்றப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினர் கலாச்சாரத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகியும் பேசினார்.
டில்லிக்கு மாநிலத் தகுதி வழங்குவது குறித்து பாஜக பேசிவந்த நிலையில் அதிகாரத்தை குறைக்கும் வகையில் உள்ள இந்த சட்டமசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கலாச்சார அமைச்சர் மீனாட்சி லேகி பேசும் போது,
ஆம் ஆத்மி கட்சியினர் கூச்சலிட்டதை அடுத்து “வாயை மூடிக் கொண்டு உட்காருங்கள் - இல்லையென்றால் உங் கள் வீட்டிற்கு அமலாக் கத்துறை வரும்” என்று ஒன்றிய பாஜக கலாச்சார அமைச்சர் எச்சரித்தார்.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை மிரட்டும் அவரது இந்த பேச்சு அடங்கிய காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன். சிபிஅய், அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் பாஜக அரசின் கைப்பாவைகளாக இயங்கி வருவதை நாடாளுமன்றத்திலேயே ஒப்புக் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment