இணைய வழியாக நடந்த இக்கலந்தாய்வில் 40 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். அர சின் சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் முதலில் இடங்கள் ஒதுக்கப் பட்டன. பொது கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்து உறுதி செய்தனர்.
நீட் மார்க் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அவர்கள் விரும்பிய கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களுக்கு நேற்று (7.8.2023) இடங்கள் ஒதுக்கப் பட்டன. அதனை தொடர்ந்து ஒதுக்கீட்டு கடிதத்தை பதிவிறக்கம் செய்து அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும். கல்லூரிகளில் சேருவதற்கு 11-ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்கட்ட கலந்தாய்வில் 80 முதல் 90 சதவீத இடங்கள் நிரம்பி விட்டதாக மருத்துவ சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்து செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-
அரசு மற்றும் சுயநிதி கல்லூரி களில் உள்ள அனைத்து அரசு ஒதுக்கீட்டு மருத்துவப் படிப் பிற்கான இடங்களும் நிரம்பி விட்டன. அதே போல் அரசு கல்லூரி களில் உள்ள பல் மருத்துவ படிப்பு இடங்களும் நிரம்பின.
சுயநிதி கல்லூரிகளில் பல் மருத்துவ இடங்கள் கொஞ்சம் காலியாக உள்ளன. என்.ஆர்.அய். ஒதுக்கீட்டில் சுயநிதி கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்கள் நிரம்ப வில்லை. 11ஆம் தேதி மாலைவரை கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
அதன் பிறகு தான் எத்தனை பேர் கல்லூரிகளில் சேரவில்லை என முழுமையாக தெரியவரும். அதில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாட்டு மாணவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளார்.
இது போல் ஏற்படும் காலி இடங்கள் பட்டியல் எடுக்கப்பட்டு 2ஆ-வது கட்ட கலந்தாய்வு நடத்தப் படும் மொத்தம் 4 கட்ட மாக கலந்தாய்வு நடத்தி முடிக்கப் படும்.
இந்த மாதம் இறுதிக்குள் பெரும்பாலான மருத்துவ இடங் கள் நிரம்பி விடும். செப்டம்பர் 1ஆம் தேதி முதல் முத லாம் ஆண்டு மாணவர் களுக்கு வகுப்புகள் தொடங் குகிறது இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment