திருச்சி, ஆக. 13 - திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலை மையில் 11.08.2023 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மா யில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முன் னிலை வகித்த இந்நிகழ்ச் சியில் மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த உறுதி மொழியினை ஏற்றனர்.
மேலும். இந்நிகழ்ச்சி யில் போதைப்பொருட் களால் இ¬ ளய சமுதா யம் எவ்வாறு பாதிக்கப் படுகின்றது மற்றும் அதனை ஒழிப்பதற்காக தமிழ்நாடு அரசு மேற் கொள்ளும் செயல்பாடு கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இந் நிகழ்ச்சியினை நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் பேரா. அ.ஜெசிமா பேகம் சிறப்பாக செய்திருந்தார்.
No comments:
Post a Comment