ஆவடி, ஆக. 1- ஆவடி மாவட்ட திராவிடர் கழ கத்தின் சார்பில் மாதாந் திர கலந்துரையாடல் கூட்டம் 30.7.-2023 ஞாயிற் றுக்கிழமை காலை 11-00 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் நடைபெற்றது.
மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு முன்னி லையில் திருநின்றவூர் நகர இளைஞரணி செயலாளர் சிலம் பரசன் கடவுள் மறுப்பு கூற மாவட்ட தலைவர் வெ. கார்வேந்தன் தலைமை யில் நடைபெற்றது.
கூட்டத்தில் திருநின்ற வூர், பட்டாபிராம், அம் பத்தூர் மற்றும் வாய்ப் புள்ள பகுதிகளில் தெரு முனை பிரச்சாரக் கூட் டங்கள் நடத்துவது என் றும் ஆவடி, பூந்தமல்லி, மதுரவாயல் பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்க ளின் வரவு- செலவு கணக்கு ஒப்படைக்கப்பட்டு கூட் டம் நடைபெற உறு துணையாக இருந்த தோழர்களுக்கு பாராட் டும் வாழ்த்தும் தெரிவிக் கப்பட்டது.
வரும் செப்டம்பர் மாதத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரியார் பட ஊர்வலமும் புதிய இடங்களில் கழகக் கொடி மரங்கள் நிறுவ வேண்டும் எனவும், செப்டம்பர் 30 அன்று பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இத்தீர்மானங் களையொட்டி மாவட்ட துணை தலைவர் மு.ரகு பதி, இணைச் செயலாளர் உடுமலை வடிவேல் துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், ஆவடி மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவர் ஜானகிராமன், செயலா ளர் கார்த்திக்கேயன், துணைத் தலைவர் ஜெய ராமன், துணைச் செயலா ளர் சுந்தர்ராஜன், ஆவடி மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணி, திருநின்றவூர் நகர செய லாளர் கீதா இராமதுரை, மதுரவாயல் பகுதி கழக தலைவர் சு.வேல்சாமி, செயலாளர் தங்க.சரவ ணன், பட்டாபிராம் பகுதி தலைவர் இரா.வேல்முரு கன், ஆவடி நகர தலைவர் கோ.முருகன், திருமுல் லைவாயில் பகுதி கழக தலைவர் இரணியன் ( எ) அருள்தாஸ் மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் இரா.கலைவேந்தன், பழ.நல்.முத்துக்குமார், மதுரவாயல் காமாட்சி ஆகியோர் தீர்மானத்தை யொட்டி உரையாற்றினர்.
இறுதியில் திருமுல்லைவாயில் பகுதி கழக செயலாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment