மிதக்கும் நூலகம் : வியக்கும் செயல் திறன்! (2)
படகுகளில் ஏறிக் கூலி வேலைக்குச் செல்பவர்கள், வியா பாரிகள், பள்ளிச் சிறார்கள் மீனவ சகோதரர்கள் பெண்கள் மிதக்கும் நூலகத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். கிருஷ்ணா கால்வாய் வாசகர் கூட்டமைப்பு ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதாகக் குற்றம் சாட்டி தோழர் பட்டூரியைக் கைது செய்ய அரசு ஒரு வாரண்ட் கூடப் பிறப்பித்தது. ஆனால் கிராமப் பஞ்சாயத்து மண்டல் தலைவர்கள் படகு நூலகத்தைத் தாங்கள் எடுத்து நடத்துவோம் என்று 27 பட்டிகளில் தீர்மானம் நிறைவேற்றி மாகாண கலெக்டருக்கு மனு எழுதினார்கள். வாசிரெட்டிப்பகுதி சின்னப்பாலம் அன்னப் பூர்ணம்மா எனும் பெண்-தனது தந்தையின் சவப் பெட்டி செய்யும் பட்டறையில் பிரமாண்டமான இருபத்தேழு நூலகப் பெட்டிகளைத் தன் சொந்த உழைப்பால் செய்தார். பிறகு தண்ணீர் புகமுடியாத அளவுக்குக் களிம்புகளால் அவை பூசப்பட்டு ஒவ்வொரு படகிலும் புத்தகங்கள் பாதிப்பு அடையாமலிருக்கத் தானமாக வழங்கினார்.
அன்னப்பூர்ணம்மா - பெண்கள் முதியவர் களுக்கான எழுத்தறிவு இயக்கத்தை கிராமம் கிராமமாகக் கட்டமைத்துக் காட்டியவர்.
மீனவர்கள் முதல் விவசாயக் கூலிகள் - கட்டட வேலை செய்யும் பெண்கள் உள்பட யாவரையும் மிதக்கும் நூலக இயக்கம் வாசிப்பை நோக்கி இழுத்தது. அவர்களது போராட்டம் பலமுறை ஒடுக்கப்பட்டது நிஜாம் ஆட்களும் ஜமீன் தார்களும் வெள்ளை ஆதிக்கத்தோடு கைகோர்த் தனர். கையில் புத்தகம் வைத்திருந்தால் கூலி கிடையாது - புத்தகத்தைத் தின்று வாழமுடியுமா என்று உயர் ஜாதி பார்ப்பன மற்றும் பனியாக்கள் துர்ப்பிரச்சாரம் செய்தனர். வாசிப்பு இயக்கத்தை தொடக்கத்தில் ஆதரித்த பல பஞ்சாயத்துகளில் சில ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும் ஜமீ னையும், ஆங்கில அரசையும் ஆதரிப்பதாகவும் அறிவித்தது ஒரு கொடுமை எனில் விஜய வாடாவிற்கு ஆந்திர நூலகச் சங்கக்கூட்டத்திற்கு ரயிலில் போகும் வழியில், தான் கைது செய்யப் படலாம் என்பதை அறிந்த தோழர் பட்டூரி நாக பூஷணம் தலை மறை வானார். அவரோடு வெங்கலி புட்டண்ணா, ராகவகேசரிலு, ஜக லாரமுடி சுப்பராயன் எனப் பலரும் தலைமறைவு வாழ்வுக்குள் புகுந் தனர். தான் தலைமறைவாக இருந்தாலும் இந்த அற்புதப் போராளிகள் மிதக்கும் நூல கத்தைக் கைவிடவில்லை. பாரதி, சிங்காரவேலர், தாகூர், நஜ்ரூல், இக்பால் என பலரது படைப்பு களைத் தெலுங்கில் மொழி பெயர்த் துக் கிருஷ்ணபட்ரிகா, ஆரோக்யபட்ரிகா, சர்வ ஞான பத்ரிகா, பிரக்குதி போன்ற இதழ்களில் பிரசுரித்த தோடு அதைத் தொடர்ந்து மிதக்கும் நூலகங்களில் கிடைக்குமாறும் செய்தனர். குறிப்பாகத் தோழர் சிங்காரவேலர் எழுதிய மனிதனும் பிரபஞ்சமும், மூடநம்பிக்கைகளின் கொடுமை, சமதர்மம் போன்ற படைப்புகளைத் தோழர் பட்டுரி நாக பூஷணம் மொழி பெயர்த்துச் சிறு பிரசுரங்களாக்கி மிதக்கும் நூலகங்களில் இணைத்தார்.
மிதக்கும் நூலகங்கள் ஆந்திராவின் கடலோர கிராமங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டன. நெல்லூர் முதல் ராவல் பிண்டி வரை படகுகள் பலவற்றில் ஆற்றின்கரை மற்றும் கடற்கரை ஊர்களின் எழுத்தறிவுப் புரட்சியை இந்த நூலகத் தோழர்கள் ஒரு போராட்டமாகத் தோள்களில் சுமந்து சாதித்தனர். மிதக்கும் நூலகங்களை சர்வஜனி வித்யாபிரதாயனி நூலகம் எனும் மாதர் சங்க அமைப்பு ஜகராலமுடி மற்றும் தெனாலி ஆகிய ஆற்றோரப் படகுக் குழாம்களில் ஏற் படுத்தியது அடுத்த வரலாற்றுச் சாதனையாகும். மொத்தம் முப்பத்தி ஒன்பது மீனவர் படகுக் குழாம்களில் இரவும் பகலும் மிதக்கும் நூலகங்கள் ஏகப்பரபரப்புடன் செயல்பட்டது உலகையே வியக்க வைத்தது.
"இந்த மிதக்கும் நூலகங்களால் ஈர்க்கப்பட்ட அறிவு ஜீவிகள் பலர். அவர்களில் இந்தியப் பொது உடைமை இயக்கத்திற்கே அடிகோலிய அமீர் ஹைதர்கான் முதன்மையானவர். சங்கர் என்ற புனைப் பெயரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த போதிலும் அடிக்கடி கடல் மார்க்கமாக இருளில் பயணித்து மிதக்கும் நூலக இயக்கத்தில் பங்களித் தவர் அவர்.
1939இல் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியபோது அதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது என்பதை வைத்து மிதக்கும் நூலக இயக்கம் ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் என்று குற்றம் சாட்டி மேலும் கிடுக்கிப்பிடி போடப்பட்டது. தோழர் பட்டூரி நாகபூஷணம் உள்ளிட்ட பலரோடு அதே 1929-1931 ஆண்டுகளில் சென்னை லயோலா கல்லூரியில் உடன் படித்த நெல்லூர் தோழர் பி. சுந்தரய்யா எனும் பி.எஸ்., உப்பு சத்தியா கிரகத்தில் ஈடுபட்டு தஞ்சாவூர் சிறுவர்சிறை, மத்திய சிறை என தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து 1936இல் விடுதலையாகி நேராகச் சென்று மிதக்கும் நூலக இயக்கத்தில் இணைகிறார். 1936இல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டபோது அதன் நிறுவனத் தலைவரானவர் தோழர் பி.எஸ். என்பதோடு மிதக்கும் நூலக இயக்கத்தோடு இணைந்து எழுத்தறிவு பெறுவதற்கு லட்சம் விவ சாயக் கூலிகளை அந்த 1942-1943இல் இணைத்து அதைப் பிரமாண்ட இயக்கமாக்குகிறார்.
நல்கொண்டா, வாரங்கல், கம்மம் ஆகிய மாவட்டங்களில் கிராமராஜ்யங்கள் அமைந்ததும்... மிதக்கும் நூலகத்தின் வெளியே தெரியாத மவுனப் புரட்சி ஆகும். உலகெங்கும் பரவிய மிதக்கும் நூலகத்தின் பெரும் புகழால் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் தானமாக வந்து கொண்டே இருந்தன. அவற்றை எப்படிப் பராமரிப்பது எனும்நிலை வந்தபோது நூலகத்துறையின் தந்தை என்று போற்றப்படும் மதராஸ் நூலகச் சங்கத்தின் செயலராக இருந்த எஸ்.ஆர்.ரங்கனாதன் நேரில் சென்று தோழர் பட்டூரி நாகபூஷணத்தைச் சந் தித்து நூல்களின் பட்டியல் முறைப் பராமரிப்பு குறித்து தானே நேரடியாக இரண்டு மாதங்கள் செலவிட்டுப் பெரும்பங்காற்றினார். படகுகளில் பயணித்துப் பணிக்கு செல்பவர்களுக்கான வாசிப்பு பொழுதுபோக்கு நூலக இயக்கமாகத் தொடங்கப்பட்டுப் பின் எழுச்சிமிக்க பெண்கள் முதியோருக்கான எழுத்தறிவு இயக்கமான இதழ் களின் வழியே சோஷலிசப் பகுத்தறிவு இயக்க மாகவும் உருமாறிய இந்த மிதக்கும் நூலகம்தான் 1940களில் வெடித்த தெலங்கானாவின் பிரமாண்ட சிவப்பு யுத்தத்திற்கு வழிகோலிய தலைவர் களையும் உருவாக்கியது என்பது வரலாறு.
No comments:
Post a Comment