ப.க., ப.க. எழுத்தாளர் மன்றத்தினருக்கு பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் கி. வீரமணி வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 6, 2023

ப.க., ப.க. எழுத்தாளர் மன்றத்தினருக்கு பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் கி. வீரமணி வேண்டுகோள்

 டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் (ஆக.20)

மூடநம்பிக்கைகளை எதிர்த்து பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சும்

விழிப்புணர்வுக் கூட்டங்கள் நாடெங்கும் நடக்கட்டும்


டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாளில் மூடநம்பிக்கைகளை எதிர்த்து பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சும் விழிப்புணர்வு கூட்டங்கள் நாடெங்கும் நடக்கட்டும் என்று பகுத்தறிவாளர்வும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றப் பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள அடிப்படைக் கடமைகளுள் முக்கியமான - அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், கேள்வி கேட்கும் உணர்வு, சீர்திருத்தம் ஆகியவற்றை ஒவ்வொரு குடிமகனும் கடைப்பிடித்து பரப்ப வேண்டும் என்பதாகும்.

It shall be the duty of every citizen of India, to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform. 

- Article 51 a (h), The Constitution of India

தடைக்கற்களைப் போடுவது ஏன்?

ஆனால், நம் நாட்டில் அடிப்படை உரிமை களுக்காகப் போராட வேண்டியிருப்பது போலவே, அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றவும் போராட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அறிவியல் மனப் பான்மையைப் பரப்புவதற்கான களங்களில் ஈடுபடும் போதெல்லாம் அரசின் இயந்திரங்களே அதற்குத் தடைக்கற்களைப் போடுகின்றன. பொதுக் கூட்டங் களுக்கும், பேரணிகளுக்கும் அனுமதி வழங்குவதில் எவ்வளவு இடையூறுகளை ஏற்படுத்த முடியுமோ அத்தனை வகை இடையூறுகளையும் காவல்துறையினர் ஏற்படுத்துகின்றனர். ஒவ்வொரு முறையும் நீதிமன்றங் களுக்குச் சென்று அனுமதி பெற்றுவர வேண்டிய சூழல்களெல்லாம் உருவாக்கப்பட்டதுண்டு. 

மூடநம்பிக்கை ஊர்வலங்கள் மதத்தின் பெயரால், கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் நாளும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. அவற்றை மக்களுக்கு எடுத்துக் காட்டி, விளக்கி, மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிகளை, செயல்விளக்க நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்று நாம் முனையும் போதெல்லாம் தடைகளைக் கொண்டு வந்து நிறுத்துபவை அரசு இயந்திரங்களே! 

அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் 'திராவிட மாடல் ஆட்சி'!

ஆனால், இன்று நடைபெறும் 'திராவிட மாடல்' ஆட்சியில் அறிவியல் மனப்பான்மையை வளர்த் திடவும், மக்களுக்கு அறிவுப் பாதையைத் திறந்து விடவும், ஏராளமான புதிய புத்தகங்களை அரசு நிறுவனங்கள் மூலம் வெளியிடுதல், நாடு முழுவதும் புத்தகக் கண்காட்சிகளுக்கு ஆதரவு, பள்ளி மாணவர் களிடம் அறிவியல் பரப்புரை, அனைத்துக்கும் முத்தாய்ப் பாக மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என அறிவுத் திருப்பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாற்றம் அனைத்துத் தரப்பினராலும் உணரப்பட வேண்டியதாகும் - குறிப்பாகக் காவல்துறையினரால்! 

அறிவியல் உண்மைகளுக்கு இடம் தராத ஊடகங்கள்

செய்தி ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் மூட நம்பிக்கைகளுக்குத் தரும் விளம்பரம் அருவெறுக்கத் தக்கது. "வேப்ப மரத்தில் பால் வடிகிறது என்றாலும், பட்டுப் போய்ச் சாய்ந்த மரம் கிளைகள் வெட்டப்பட்டு எடை குறைந்ததும் தானாக நிமிர்கிறது (வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம்) என்றாலும், மக்கள் அவற்றைக் கடவுள் செயலாகப் பார்க்கின்றனர்" என்று அதற்கு விளம்பரம் தரும் செய்தி ஊடகங்கள், குறைந்தபட்சம் அதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல், இயற்கை உண்மைகளை உரியவர்களைக் கொண்டு, அறிவியலா ளரைக் கொண்டு வெளிப்படுத்தவும் கூட தயாராக இல்லையே! 

கடந்த வாரம் கூட திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு வயது குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு ராஜா என்பவர், அம்மன் கோவில் தீமிதி விழாவில் பங்கேற்றபோது தடுக்கி விழுந்ததில் அந்த குழந்தைக்கு 36 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்து நெஞ்சம் பதறவில்லையா? இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த காட்டுமிராண்டித்தனங்கள் தொடர்வது? இவை குறித்தெல்லாம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது ஊடகங்களின் கடமை இல்லையா?

சூரிய மறைப்பு, சந்திர மறைப்பு போன்ற இயற்கை வானியல் நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம் அவற்றை முறியடிக்கும் விதமாக அறிவியல் விளக்க நிகழ்ச்சிகளை நாம் நடத்தினாலும், புதிது புதிதாக 'உலக்கை நிற்கிறது', 'பாத்திரத்தில் தண்ணீர்' என்று ஏதாவது ஒன்றுக்கு அதிக முக்கியத்துவம் தந்து விளம்பரப்படுத்துபவை அறிவியல் கண்டுபிடிப்புகளால் உருவான தொலைக்காட்சிகளும், ஊடகங்களுமே என்பது எத்தகைய முரண்?

தந்தை பெரியார் வழியில் பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சும் பணி

ஆனால், இவற்றால் எல்லாம் பெரியார் தொண்டர் களான நாம் தயக்கம் கொள்வதில்லை. என்னை நம்பியே இப்பெரும் பொறுப்பேற்றேன் என்ற தந்தை பெரியார் வழியில், ஊடக இருட்டடிப்புகளையும், உலுத்தர் எதிர்ப்புகளையும் மீறி பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சும் பணி எப்போதும் போல் நடந்துகொண்டே இருக்கிறது. இன்னும் தீவிரப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அரசமைப்புச் சட்டமும் (1950), அதில் 51ஏ(ஹெச்) என்ற இந்தப் பிரிவும் (1976) வருவதற்கு முன்பிருந்தே இந்தப் பணியைத் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும், தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டு, பொன் விழா கண்டுள்ள பகுத்தறிவாளர் கழகமும் தொடர்ந்து செய்து வருகின்றன. இவ்வியக்கங்களின் இடைவிடாத பணி காரணமாக சுற்றிச் சூழ்ந்திருக்கும் மூடநம்பிக்கைப் பிரச்சாரங் களையும், ஊடகங்கள் அவற்றிற்குத் தரும் அதீத விளம் பரங்களையும் கடந்து, அடிப்படையான மனமாற்றம், அறிவு வளர்ச்சி பெருமளவில் நடந்து வருவதை நம்மால் கண்கூடாகக் காண முடிகிறது. பெரியார் தொண்டர்களின் உழைப்பு ஒருபோதும் வீண் போவதில்லை என்ற ஊக்கத்தோடு நம் பணியைத் தொடர வேண்டும்.

பகுத்தறிவாளர் கழகம் புது முறுக்கோடு செயல்பட்டு வருவதும் பாராட்டுக்குரியது. அதன் செயல்வீரர்களான பொறுப்பாளர்கள் தொடர்ந்து அனைத்து மாவட்டங் களிலும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு அமைப் புகளை வலுப்படுத்திக் கொண்டி ருக்கின்றனர். 

நாளும் நடக்க வேண்டிய பகுத்தறிவுப் பரப்புரையை இன்னும் பொருத்தமாக நடத்த வேண்டிய இன்னொரு நாள் தான் ஆகஸ்ட் 20.

டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவு நாளில்... 

அறிவியல் மனப்பான்மையைப் பரப்பவும், மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரவும் தொடர்ந்து பாடுபட்டுவந்த "மகாராட்டிர அந்தர்ஸ்ரத்த நிர்மூலன் சமிதி"யின் தலைவர் டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்கள் இந்துத்துவ பயங்கரவாதிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நாள் தான் ஆகஸ்ட் 20. அதனை தேசிய அறிவியல் மனப்பான்மை நாளாக முன்னெடுத்து, இந்திய பகுத்தறிவாளர் இயக்கங்களின் கூட்டமைப்பு (திமிஸிகி) தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அறியாமை இருள் விரட்ட பகுத்தறிவு விளக்க நிகழ்ச்சிகள் - நாடெங்கும் நடத்துங்கள் 

அதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகளை  20.8.2023 அன்று தொடங்கி 31.8.2023 அன்று வரை நடத்திட பகுத்தறிவாளர் கழகம் திட்டமிட்டுள்ளது. (பட்டியல் தனியே வெளியிடப்ப ட்டுள்ளது) அரங்கக் கூட்டங்களாகவும், வாய்ப்பிருக்கும் இடங்களில் தெருமுனைக் கூட்டங்களாகவும், கருத் தரங்குகளாகவும், 'மந்திரமா? தந்திரமா?' அறிவியல் விளக்க நிகழ்ச்சி களாகவும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பகுத்தறி வாளர்களையும், அறிவியல் சிந்தனை யாளர்களையும், கல்வியாளர்களையும், மாணவர் களையும் ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்துவதுடன், பகுத்தறிவாளர் கழகத்தின் பணிகளில் இத்தகையோரை இணைத்துச் செயல்படுவதற்கும் இந்நிகழ்ச்சியை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

அறிவியல் மனப்பான்மையை உருவாக்குவோம்! அறியாமை இருளை விரட்டுவோம்!


கி. வீரமணி

புரவலர், 

பகுத்தறிவாளர் கழகம்

.........................

மாவட்டம்  - அமைப்பு பொறுப்பாளர் -  பேச்சாளர்  -  பொருள்

             

சோழிங்கநல்லூர் டி. ஆனந்தன் டாக்டர் கணேஷ் வேலுச்சாமி

'அறிவியல் மனப்பான்மை'

ஆவடி தி. ஜானகிராமன் டாக்டர் புருனோ

மருத்துவமும் மூடநம்பிக்கைகளும்

திருவள்ளூர் கி.எழில் வழக்குரைஞர் சு.குமாரதேவன்

  கல்வித்துறையை காவிமயமாக்கதே!

செங்கல்பட்டு அ.சிவக்குமார் அறிவியலாளர் அறிவரசு

அறிவியல் செயல் விளக்க நிகழ்ச்சி

வேலூர் மா. அழகிரிதாசன் பேராசிரியர் சி. தமிழ்ச்செல்வன்

அறிவியலும் - போலி அறிவியலும்

மு. சுகுமார்

புராணங்களை வரலாறாக்காதே!

திருவண்ணாமலை பா. வெங்கட்ராமன் அண்ணா. சரவணன்

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம்

 அறியாமை அகற்றுவோம்

செய்யாறு வி. வெங்கட்ராமன் வழக்குரைஞர் பா. மணியம்மை

பேராசிரியர் அருள்செல்வன்

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம்

அறியாமை அகற்றுவோம்

தருமபுரி கதிர் செந்தில்குமார் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி

ஊமை ஜெயராமன்

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம்

அறியாமை அகற்றுவோம்

திருப்பத்தூர் சி. தமிழ்ச்செல்வன் கோ. ஒளிவண்ணன்

அறிவியல் பார்வையே - சரியான தீர்வு!

அரூர் சா. ராசேந்திரன் வீ. குமரேசன்

அறிவியல் அடிப்படையில் 

வாழ்வியல் முறை

ஓசூர் சிவந்தி. அருணாசலம் பேராசிரியர் கு. வணங்காமுடி

எழுத்தாளர் கி.சு. இளங்கோவன்

அறிவியல் பார்வை

விழுப்புரம் (செஞ்சி) துரை. திருநாவுக்கரசு சு. அறிவுக்கரசு

கல்வித் துறையை காவிமயமாக்காதே...

திண்டிவனம் மு. ராதா வேட்டவலம் பட்டாபிராமன்

நாமும்... அறிவியலும்

கல்லக்குறிச்சி பெ. எழிலரசன் ஈட்டி கணேசன்

'மந்திரமா? தந்திரமா?'

அறிவியல் செயல் விளக்க நிகழ்ச்சி!

கடலூர் வி. வெங்கடேசன் குமார்,  வடலூர் புலவர் இராவணன்

'மந்திரமா? தந்திரமா?'

அறிவியல் செயல் விளக்க நிகழ்ச்சி!

சிதம்பரம் கோ. நெடுமாறன் இளவரசி சங்கர்

அறிவியலும் - நாமும்

மேட்டூர் கோவி. அன்புமதி யாழ்.திலீபன்

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்

சேலம் வீரமணி ராஜு வழக்குரைஞர் அ. அருள்மொழி

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்

ஆத்தூர் முருகானந்தம் இனியன்

அறிவியலும் - நாமும் 

நாமக்கல் சி. இளங்கோ ஊடகவியலாளர் செந்தில்வேல்

அறிவியலும் - ஊடகங்களும்

கோபி சீனு. தமிழ்ச்செல்வி அதிரடி அன்பழகன்

அறிவியல் வழி நடப்போம்

கோவை பெ. சின்னச்சாமி ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

அறிவியலும் - மூடநம்பிக்கைகளும்

திருப்பூர் வெ. குமாரராஜா வழக்குரைஞர் பூவை. புலிகேசி

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்

திருச்சி பா.லெ. மதிவாணன்  பேராசிரியர் ந. எழில்

அறிவியல் பார்வை

கரூர் க.சி. அக்பர் அறிவியலாளர் பொன். அருள்குமார்

அறிவியல் மனப்பான்மை 

வளர்ப்பது எப்படி?

பெரம்பலூர் பெ. நடராசன் சில்லத்தூர் சிற்றரசு

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்

அரியலூர் தங்க. சிவ.மூர்த்தி நாத்திக நம்பி

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்

மாவட்டம் அமைப்பு  பேச்சாளர் - பொருள்

பொறுப்பாளர்

நாகை மு.க. ஜீவா இள. மேகநாதன்

கோ. செந்தமிழ்செல்வி

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்

திருவாரூர் ஈ.வே.ரா. வழக்குரைஞர் க. சிங்காரவேலு

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்

தஞ்சாவூர் ச. அழகிரி பேராசிரியர் நம். சீனிவாசன்

க. சிந்தனை செல்வன்

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்

மன்னார்குடி வை. கவுதமன் மாங்காடு மணியரசன்

அறிவியலும் - நாமும்

கும்பகோணம் சு. சண்முகம் (ஆடிட்டர்) முனைவர் துரை. சந்திரசேகரன்

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்

பட்டுக்கோட்டை ஆ. ரெத்தினசபாபதி தேவகோட்டை அறவரசன்

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்

புதுக்கோட்டை செ.அ. தருமசேகர் தி. என்னாரெசு பிராட்லா

அறிவியல் பார்வை

அறந்தாங்கி க. வீரையா கோபு. பழனிவேல்

பாவலர் பொன்னரசு

அறிவியலும் - நாமும்

காரைக்குடி சு. முழுமதி கடலூர்  தாமோதரன்

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்

ராமநாதபுரம் சி. பேரின்பம் க. சுடர்வேந்தன்

'மந்திரமா?  - தந்திரமா? 

அறிவியல் செயல் விளக்க நிகழ்ச்சி

சிவகங்கை து. செல்லமுத்து முனைவர் வே. இராஜவேல்

சோம. நீலகண்டன்

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்

திண்டுக்கல் பெ. அறிவுடைநம்பி இரா. பெரியார் செல்வன்

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்

பழனி திராவிடச்செல்வன் வீர. கலாநிதி

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்

தேனி டி.பி.எஸ்.ஆர். அரிகரன் மு. கலைவாணன்

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்

மதுரை அ. துரைராசு பேரா. மு.சு. கண்மணி

அறிவியலும் - நாமும்

விருதுநகர் பெ.த. சண்முகசுந்தரம் பேரா. சுப. பெரியார்பித்தன்

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்

திருநெல்வேலி செ. சந்திரசேகரன் மா.பால் ராசேந்திரம்

எழில்வாணன்

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்

தென்காசி சி. தங்கதுரை வா.நேரு 

பேராசிரியர் திருநீலகண்டன்

அறிவியலும் - நாமும்

தூத்துக்குடி ச. வெங்கட்ராமன் இரா. அன்பழகன்

அறிவியல் மனப்பான்மை 

வளர்ப்பது எப்படி?

கன்னியாகுமாரி உ. சிவதாணு அ. சவுந்தரபாண்டியன்

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்

புதுச்சேரி மெ. நடராசன் த.சீ. இளந்திரையன்

ஆடிட்டர் மு. இரஞ்சித்குமார்

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்

காஞ்சிபுரம் இளம்பரிதி சே.மெ. மதிவதனி

அறிவியல் வாழ்வு

இராணிப்பேட்டை த.க.ப. புகழேந்தி காஞ்சி பா. கதிரவன்

அறிவியலும் மூடநம்பிக்கைகளும்

நீலமலை பொறியாளர் ஈசுவரன் டாக்டர் இரா. கவுதமன்

வி.சி. வில்வம்

அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் 

அறியாமை அகற்றுவோம்


No comments:

Post a Comment