👉 திமுக பொதுக்குழு உறுப்பினரும், செய்தித் தொடர்பாளருமான பா.மதிவாணன் ஆசிரியரை சந்தித்து பயனாடை அணிவித்து பெரியார் உலகத்திற்கு ரூ.5000/- நன்கொடை வழங்கினார். (பெரியார் திடல் - 4.8.2023)
👉 திராவிடர் இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து, தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார். (பெரியார் திடல் - 5.8.2023)
👉 வடசென்னை, ஆவடி, கும்மிடிப்பூண்டி மாவட்டங் களின் இளைஞரணி சார்பாக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ 1000/- வழங்கினார்.உடன் கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணித் தலைவர் பா. சக்கரவர்த்தி, வடசென்னை மாவட்ட இளைஞர் அணித் தலைவர் நா.பார்த்திபன், செயலாளர் சு.அரவிந்த் குமார், ஆவடி மாவட்ட திருநின்றவூர் நகர இளைஞரணிச்செயலாளர் மா.சிலம்பரசன், கலைமணி. (பெரியார் திடல் - 5.8.2023)
👉 ‘பெரியார் நூலக வாசகர் வட்டம்’ சார்பாக, புரவலர் சத்திய நாராயண சிங் தலைமையில், நூலக வாசகர் வட்டத்தின் தலைவரும், வழக்குரைஞருமான ஆ. வீரமர்த்தினி, செயலாளரும், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளருமான ஆ.வெங்கடேசன், அருணகிரி, தென்னவன், ஜெ.ஜனார்த்தனம், தென்மாறன், வழக்குரைஞர் பா. மணியம்மை உள்ளிட்ட தோழர்கள் தமிழர் தலை வருக்கு பயனாடை அணிவித்தனர். புரவலர் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 500/- வழங்கினார். கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி உடனிருந்தார். (பெரியார் திடல் - 5.8.2023)
👉 சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அ. அருள்மொழி, சேசுசுபாலன் ராஜா, கான்சியஸ் இளங்கோ, ஆ.வீரமர்த்தினி, துரை.அருண், பா.மணியம்மை உட்பட 20 க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். வழக்குரைஞர் துரை அருண் விடுதலை சந்தா ரூ.2000/- வழங்கினார். (பெரியார் திடல் - 5.8.2023)
👉 பேராசிரியர் கா.நீலகிருஷ்ணபாபு கணிப்பொறி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றதின் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடைய நண்பர் பேராசிரியர் ஆ.செல்லப்பா உடன் சேர்ந்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- நன்கொடை வழங்கினார்கள். (07.08.2023, பெரியார் திடல்).
👉 தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களைச் சந்தித்து, கும்மிடிப்பூண்டி மாவட்ட பொறுப்பாளர்கள், தலைமைக் கழக அமைப்பாளர் வி. பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையில் ஆசிரியரை சந்தித்து ஓராண்டு விடுதலைச் சந்தா ரூபாய் 2000 மும் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 1500-ம் வழங்கினார்கள். (07.08.2023, பெரியார் திடல்).
👉 ஆவடி மாவட்டகழகப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சென்னை வேப்பேரி பெரியார் திடலில் 4.8.2023 அன்று சந்தித்தனர். மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு தலைமையில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், துணைத் தலைவர்கள் மு.ரகுபதி, வை.கலையரசன், துணைச் செய லாளர் பூவை தமிழ்ச்செல்வன் மகளிரணி அமைப்பாளர் ராணி, இளைஞரணி செயலாளர் ஏ.கண்ணன், பகுத்தறி வாளர் கழக துணைச் செயலாளர் சுந்தர்ராஜன், திருமுல் லைவாயில் பகுதி தலைவர் இரணியன்( எ) அருள்தாஸ், அம்பத்தூர் பகுதி செயலாளர் அய்.சரவணன், ஆவடி நகர துணைத் தலைவர் சி.வஜ்ரவேல், பூந்தமல்லி நகர தலைவர் பெரியார் மாணாக்கன், முகப்பேர் முரளி, பெரியார் பெருந்தொண்டர் அ.வெ.நடராசன், எ.மனோக ரன் மாங்காடு தி.மு.க.பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.நிகழ்வின் மகிழ்வாக மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் பயனா டைக்கு பதில் ரூபாய் ஆயிரம் (1000) செயலாளர் க.இளவரசன் பெரியார் உலகத்திற்கு ரூபாய் ஆயிரம் (1000) துணைத் தலைவர் மு.ரகுபதி, மாவட்ட மகளிரணி அமைப் பாளர் ராணி ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் அய்நூறு (500) பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் சுந்தர்ராஜன், மாங்காடு எ.மனோகரன் சால்வை அணிவித்து மகிழ்ந்தனர்.பூந்தமல்லி நகர தலைவர் பெரியார் மாணாக்கன் வழக்கமாக வழங்கும் ஆகஸ்டு மாதத்திற்குரிய நன்கொடைகளை வழங்கினார்.
No comments:
Post a Comment