காரைக்குடி, ஆக. 21- காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பில் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் ஆகஸ்ட் 20 அன்று தேசிய அறிவியல் மனப் பான்மை நாள் சிறப்பு கருத்தரங்கம் மாவட்ட ப.க தலைவர் டாக்டர் சு. முழுமதி தலைமையில், மாவட்ட கழக செயலாளர் ம.கு. வைகறை, கழக துணைத் தலைவர் கொ.மணி வண்ணன், கழக துணைச் செயலா ளர் இ.ப பழனிவேல் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்விற்கு மாவட்ட ப.க செய லாளர் ந. செல்வராசன் வரவேற் புரை ஆற்றினார். மாவட்ட ப.க துணைச் செயலாளர் ஒ. . முத்துக் குமார் தனது தொடக்க உரையில் அறிவியல் மனப்பான்மையை மாணவர் மத்தியில் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
தேவகோட்டை ஒன்றிய ப.க தலைவர் கவிக்கோ அ.அரவரசன், டாக்டர் நரேந்திர தபோல்கர் படத்தினை திறந்து வைத்து, அவ ருடைய வாழ்வின் நெடிய மூடநம் பிக்கை ஒழிப்பு பரப்புரையையும், அதனால் அவர் எதிர்கொண்ட எதிரிகளின் அச்சுறுத்தல்களையும், அதனால் கொலையுண்ட விதத் தையும் எடுத்துரைத்தார்.
"அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம், அறியாமை அகற்று வோம்" என்ற தலைப்பில் சிறப்புரை யாற்றிய கழக பொதுக்குழு உறுப் பினர் கடலூர் நா. தாமோதரன் தமது உரையில், மனித வாழ்வு என்பது பிறப்பு, இருப்பு, இறப்பு என்ற இயற்கைத் தன்மை கொண் டதே, அனைத்திற்கும் அறிவியல் மனப்பான்மை கொண்டு அணுக வேண்டும் என்றார். மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப் பாளர் த.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
நிகழ்வில் காரைக்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் தோழர் சிவாஜி காந்தி, "மானுடம்" இதழ் ஆசிரியர் தங்க.செங்கதிர், பெரியார் பெருந் தொண்டர் ப.சுந் தரம், தேவகோட்டை நகர தலை வர் வீ முருகப்பன், மாவட்ட அமைப் பாளர் கல்லூர் சி. செல்வமணி, காரைக்குடி நகர தலைவர் ஜெக தீசன், காளையார் மாணவர் கழக தோழர், மு.ராஜேஷ், பேராசிரியர் வை. வைரமணி, மாவட்ட மாண வர் கழகத் தலைவர் சே.வெற்றிச் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment