புதுடில்லியில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் - சமூக நீதி கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

புதுடில்லியில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் - சமூக நீதி கருத்தரங்கம்

சென்னை, ஆக. 5- ஜாதிவாரி கணக்கெடுப்பு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக தனி அமைச்ச ரகம், பிற்படுத்தப்பட்டோ ருக்கு நிதிநிலை அறிக் கையில் போதுமான நிதி ஒதுக்கீடு மற்றும் பிற் படுத்தப்பட்டவர்களுக் கான சிறப்புத் திட்டம், கிரீமிலேயர் முறையை நீக்கப்பட வேண்டும் - அதுவரை மாத ஊதியம் மற்றும் விவசாய வருவா யைக் கணக்கில் கொள் ளாமல் ஆண்டுவருமான வரம்பு ரூ.15 லட்சமாக உயர்த்திட வேண்டும், இடஒதுக்கீட்டில் 50 விழுக்காடு வரம்பை நீக்க வேண்டும் ஆகிய கோரிக் கைகளை முன்னிறுத்தி டில்லி ஜந்தர் மந்தர் பகு தியில் 10.8.2023 அன்று காலை 11 மணிக்கு மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
தெலங்கானா பிற் படுத்தப்பட்டோர் உத் யோகலு சங்கம், தெலங் கானா பிற்படுத்தப்பட் டோர் மகாசபா, பிற் படுத்தப்பட்டோர் படிப்பு அமைப்பு, ஆந் திரப்பிரதேச பிற்படுத்தப் பட்டோர் சைதன்ய சமிதி, ஓபிசி சென்ட்ரல் கமிட்டி-ஜெய் பிசி, பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு-சண்டிகர், அகில இந்திய பிற்படுத் தப்பட்டோர் கூட்ட மைப்பு மாணவர் சங்கம், திராவிட மாணவர் கூட் டமைப்பு, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர்கள் நலச்சங் கங்கள் உள்ளிட்ட பல் வேறு அமைப்புகள் ஆதர வுடன் இப்போராட்டம் நடைபெறுகிறது.
10.8.2023 அன்று மாலை 5.30 மணிக்கு புதுடில்லி ரஃபிமார்க்கில் நாடாளுமன்ற அவைத் தலைவர் இணைப்புக் கட்டடம் அரசமைப்புச் சட்ட அவையில் சமூக நீதிக்கான கருத்தரங்கமும் நடைபெறுகிறது.
இத்தகவலை அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி தமது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment