அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் டில்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் டில்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம்

புதுடில்லி, ஆக.12- அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் கூட்ட மைப்பின் செயல் தலைவர் யு.சின்னய்யா தலைமையில் பிற்படுத்தப்பட்டவர்களின் நலனைக்காத்திட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் நாடாளுமன்றம் எதி ரில் ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் 10.8.2023 அன்று மாலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாநிலங்களி லிருந்தும் பங்கேற்றனர். பிற்படுத்தப்பட்டோ ரின் நலனைக்காத்திட போராட வேண்டிய தன் அவசியம்குறித்து கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி உரையாற்றினார்.

நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்கள் வி.அனுமந்தராவ், ஆனந்தபாஸ்கர், நாடாளு மன்ற உறுப்பினர் ஆர்.கிருஷ்ணய்யா ஆகி யோர்  ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப் பாளர்களாக பங்கேற்று கண்டன உரை யாற்றினர்.

கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் ஆசாக் கே.ஆர்.சர்க்கார், வி.என்.புருஷோத்த மன், ரவீந்திரராம், எம்.ஜார்ஜ் ஃபெர் ணான்டஸ், எஸ்.இரவிக்குமார்,வி.தனகர்னா சவுத்ரி, சண்டிகர் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு பல்விந்தர்சிங் முல்தானி உள்ளிட்ட ஆதரவு கூட்டமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் உரை யாற்றினர்.

கொளுத்தும் வெயிலில் ஆர்ப்பாட் டத்தில் கோரிக்கைகளுடன் முழங்கிய முழக்கங்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

ஆர்ப்பாட்டத்தில், ஆந்திரப்பிரதேச கிராமீனா விகாஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பிடிஎல், பெல், பீகார் கூட்ட மைப்பு, சிசிஜிபி, குண்டூர், சென்சஸ், சிபிசிஎல், இசிஅய்எல், எச்ஏஎல், அய்சிஎப், அய்ஓபி, மிதானி, ஜிஅய்சி, நியூஇந்தியா அஷ்யூரன்ஸ், என்அய்ஆர்டி, அய்சிஎம்ஆர், என்எல்சி- நெய்வேலி, ஆஃப், மேடக், ஓரி யண்டல் இன்ஷ்யூரன்ஸ், ஆர்பிஅய், எஸ்எஸ்பி சேலம், தெலங்கானா ஓபிசி கூட்டமைப்பு, யூனியன் வங்கி, உத்தரப் பிரதேச மாநில கூட்டமைப்பு, எஸ்பிஅய், ஆர்எம்ஜிபி-ராஜஸ்தான், டிவிசி-தன்பாத், ஜிஅய்சி-யுனைடெட் இந்தியா இன்ஷ்யூ ரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் நாடுதழுவிய அளவில் ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றனர்

No comments:

Post a Comment