முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (12.8.2023) வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி மாவட் டம், நாங்குநேரியில் சில நாட் களுக்கு முன் பள்ளி மாணவன் மற்றும் அவன் குடும்பத்தினர், சக மாணவர்களால் மிகக் கொடூர மான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்கும் வேத னைக்கும் உள்ளாக்கியது.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவர் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூறி வர அனுப்பி வைத்தேன். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அந்த மாண வனின் உயர்கல்வி செலவு முழுவ தையும் அவரே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள் ளார். இளைய சமு தாயத்தினரிடையே ஜாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்கால தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்த தல்ல.
இது உடனடியாக சரி செய்யப் பட வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சினை என்பதால், இதில் அரசு எந்த வகையான நடவடிக் கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஜாதி, இன பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ் நிலையை உருவாக்கிட மேற் கொள்ள வேண்டிய நடவடிக் கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். இந்த குழு, மேற்படி பொருள் தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகை துறையினர் என பல்வேறு தரப் பினரிடம் இருந்தும் கருத்துக்களை பெற்று அதனடிப்படையில் அர சுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்திடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதிர்ச்சியில் இறந்த கிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (12.8.2023) வெளியிட்டுள்ள அறிக்கை: நாங்குநேரி வட்டம் மற்றும் கிராமத்தை சேர்ந்த அம்பிகா என்பவரது மகன் சின்னத்துரை மற்றும் மகள் சந்திரா செல்வி ஆகிய இருவரும் கடந்த 9ம் தேதி அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன் (59) அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந் தார் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனை யடைந்தேன். உயிரிழந்த கிருஷ் ணன் குடும்பத்தினருக்கும், உற வினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்ப சூழ் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ரூ.3 லட்சம் முதல மைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட் டுள்ளேன் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment