31.8.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
👉குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 கிரக லட்சுமி திட்டம் கருநாடகாவில் துவக்க விழாவில் சித்தராமையா, ராகுல், கார்கே பங்கேற்றனர்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
👉 காவிரி ஆணைய அறிவுறுத்தலின் பேரில் தமிழ் நாட்டிற்கு 6300 கியூசெக்ஸ் தண்ணீரை விடுவித்தது கருநாடக அரசு.
தி இந்து:
👉"ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு சபை 370ஆவது பிரிவை ரத்து செய்யக் கூடாது என்று குடியரசுத் தலை வருக்கு பரிந்துரைத்திருந்தால், அந்த ஆலோசனையை குடியரசுத் தலைவர் மீற முடியுமா?" என தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியிடம் கேள்வி எழுப்பியது.
தி டெலிகிராப்:
👉இந்தியா கூட்டணி பிரதமர் முகம் குறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், 'பிரதமர் வேட்பாளர்களுக்கு எங்களுக்கு பல தேர்வுகள் உள்ளன. ஆனால் பிஜேபிக்கு ஒரு தேர்வு தவிர வேறு எதுவும் இல்லை என பதிலடி.
👉 சிபிஎம் பிரதிநிதிகள் முசாபர்நகரில் பள்ளித் தோழிகளால் அவரது மதத்தின் காரணமாக தலைமை ஆசிரியரின் கட்டளையின் பேரில் தாக்கப்பட்ட முஸ்லிம் பள்ளி மாணவனின் குடும்பத்தை சந்தித்தனர். அவர்களது மூன்று மகன்களையும் கேரளாவிற்கு படிக்க அனுப்புமாறு அழைப்பு விடுத்தனர்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment