கடவுள் சக்தி பாரீர்! சிறீரங்கம் கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

கடவுள் சக்தி பாரீர்! சிறீரங்கம் கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்தது

திருச்சி, ஆக. 5- சிறீரங்கம் கோயிலின் கிழக்கு வாசல் கோபுரத்தின் ஒரு பகுதி சுவர் நள்ளிரவு இடிந்து விழுந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

நள்ளிரவில் கோபுர சுவர் இடிந்து விழுந்த தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிழக்கு வாசல் நுழைவு ராஜகோபுரத்தில் உள்ள நிலைகளில்  விரி சல் ஏற்பட்டு கீழே விழும் அபாயம் நிலவியது. சிமென்ட் மேற்புற பூச்சு உடைந்து கீழே விழாமல் இருப்பதற்காக பலகை, கம்புகளை கொண்டு முட் டுக் கொடுக்கப்பட்டுள் ளது. மேற்புற பூச்சுகள் எப்போது இடிந்து விழும் என்று தெரியாமல் அவ்வழியாக பொது மக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வந்தனர்.

கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் அருகி லேயே கிழக்கு ரங்கா மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ராஜன் நடுநிலைப் பள்ளி, சிறீரங்கம் பெண் கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல் நிலைப்பள்ளிகள் அருகருகில் செயல்பட்டு வருகிறது. 

இதனால், கிழக்கு வாசல் நுழைவு கோபுரத் தின் வழியாக தினசரி பள்ளிகளுக்கு சென்று வரும் மாணவ, மாணவி களும் பயத்துடன் கடந்து  செல்கின்றனர்.

ஏதேனும் அசம்பாவி தம் ஏற்படுவதற்கு முன்பு கிழக்கு வாசல் கோபு ரத்தை சீரமைக்க வேண் டும், அங்கு முளைத்துள்ள செடிகளையும் அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கான சீரமைப்புப் பணிகள் ரூ.67 லட்சம் செலவில்  மேற்கொள்ளப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் நேற்று (4.8.2023) நள்ளிரவு திடீ ரென கிழக்கு கோபுரத்தில் முட்டுக் கொடுக்கப்பட்டி ருந்த பகுதி இடிந்து விழுந்தது. நள்ளிரவு என் பதால் எவ்வித அசம்பா வித சம்பவமும் ஏற்பட வில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் நிர்வா கம் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இடிந்து விழுந்த கான்கிரீட் கல வைகளை டிராக்டர் மூலம் அப்புறப்படுத்தி னர். மேலும், அங்கு பாது காப்பு பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment