மாணவிக்கு உடனடி உதவி முதலமைச்சருக்கு து.இரவிக்குமார் நன்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 7, 2023

மாணவிக்கு உடனடி உதவி முதலமைச்சருக்கு து.இரவிக்குமார் நன்றி

சென்னை, ஆக. 7- விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை கள மருதூரைச் சேர்ந்த மாணவி இரா.கார்த்திகா கோயம்புத்தூரி லிருக்கும் அரசு கலைக்கால்லூரி யில் பிஎஸ்சி புவியியல் சேர்ந்து உள்ளார். அவருக்கு மாணவியர் விடுதியில் இடம் கிடைக்க வில்லை எனத் தெரிவித்தார். 

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர் பால மணிகண்டனிடம் உதவும்படி கேட்டேன். உடனே நடவடிக்கை எடுத்து அந்த மாணவிக்கு இடம் கிடைக்கச் செய்தார். அரை மணி நேரத்துக்குள் இது எல்லாமே நடந்து விட்டது. பாலமணிகண்டன் அவர்களுக்கும், அமைச்சருக்கும் எளியோரின் அரசு இது என உணரச்செய்யும் முதலமைச்சருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment