சென்னை, ஆக.11 சென்னை - வடபழனி, சிம்ஸ் மருத்துவமனையில் உள்ள அய்.சி.ஏ.டி. நிறுவன மருத்துவர்கள் குழு, 66 வயது அமெரிக்க வாழ் - இந்திய முதியவருக்கு இதயம் சார்ந்த அரிய காரணத் தால் ஏற்பட்ட குரல் கரகரப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றுக்கு சிக்கலான அறுவை சிகிச் சைகள் மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளித்தது. அய்.சி.ஏ.டி. இயக்குநர் மற்றும் மூத்த மருத்துவ ஆலோசகருமான டாக்டர் வி.வி. பாஷியின் தலைமை யிலான மருத்துவர் குழு, துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தில் கரோனரி ஆர்ட்டரி பைபாஸ் கிராஃப்டிங் சிகிச்சையை மேற்கொண்டது.
அதைத் தொடர்ந்து மகாதமனியில் ஸ்டென்டிங் செய்யப்பட்டதன் மூலம் நோயாளியின் ஆயுள் கூட் டப்பட்டது மட்டுமல்லாமல், அவரது வாழ்க்கைத் தரமும் உயர்த்தப்பட்டது. மூத்த இதய மயக்க மருத் துவ நிபுணர் டாக்டர் அஜூ ஜேக்கப் இன்டர் வென்ஷனல் ரேடியலஜிஸ்ட் டாக்டர் கே. முரளி இதய மற்றும் தொராசிக் அறுவை சிகிச்சை டாக்டர் முகமது இத்ரீஸ் இதய மயக்க மருத்துவ நிபுணர் டாக்டர் அருண்குமார் ஆகியோர் இந்த அறுவை சிகிச்சை மருத்துவக் குழுவில் இடம்பெற்ற மற்ற உறுப்பினர்கள் ஆவர்.
இது குறித்து எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் முனைவர் ரவி பச்சமுத்து கூறுகையில், “இதுபோன்ற மிகவும் சிக்கலான-ஆபத்தான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க, அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், விரிவான சிகிச்சைகள் மற்றும் மருத்துவ பராமரிப்புக்காக மாடுலர் தியேட்டர்கள், கேத் லேப் (Cath Lab) உட்பட அதிநவீன தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இந்த வசதிகளுடன் ஐ.சி.ஏ.டி. இயக்குநர், மூத்த ஆலோசகரான டாக்டர் வி.வி. பாஷியின் வழிகாட்டுதலுடன் அர்ப் பணிப்புள்ள அவரது குழுவின் மூலம் படிப்படியான நடைமுறைகளை வெற்றிகரமாக எங்களால் செய்ய முடியும். என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment