கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் காஞ்சியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 2, 2023

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் காஞ்சியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை, ஆக. 2 - தமிழ் நாட்டில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்.15ஆ-ம் தேதி அவர் பிறந்த ஊரான காஞ்சி புரத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது அளித்த வாக் குறுதிப்படி, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக் கப்பட்டது. இத்திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக் கப்பட்டதுடன், செப்.15ஆ-ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று திட்டம் தொடங்கப்படும் என் றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

திட்டத்தை செயல்படுத்தும் முறை, பயனாளிகள் யார், தகுதி கள், விண்ணப்பம் வழங்குவது குறித்து முதலமைச்சர் தலை மையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அத்து டன் கலைஞர் நூற்றாண்டை ஒட்டி, ’கலைஞர் மகளிர் உரி மைத் தொகை திட்டம்’ என இத் திட்டத்துக்கு பெயரிடப்பட்டது.

இதையடுத்து இரண்டு கட்ட மாக விண்ணப்பங்கள் வழங்கி, அவற்றைப் பதிவு செய்து தகுதி யானவர்களைத் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன் படி, முதல்கட்டமாக கடந்த ஜூலை 24ஆ-ம்தேதி முதல் 3 நாட்கள் நியாய விலைக்கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப் பட்டன. இதை தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன்பின், ஜூலை 27-ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஆக.4ஆ-ம் தேதியுடன் முடிந்ததும், இரண்டாம் கட்ட விண்ணப்பப் பதிவு ஆக.5 முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும்.

இதற்கான விண்ணப்ப விநி யோகம் நேற்று (ஆக.1) தொடங் கியது. விண்ணப்பங்கள் அனைத் தும் இதற்கென உருவாக்கப்பட்ட செயலியில் பதிவு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு செப்.15ஆ-ம் தேதி முதல் அவரவர் வங்கிக் கணக்குகளில் மாதம் ரூ.1000 பணம் வரவுவைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், இத்திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப். 15ஆ-ம் தேதி, அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் தொடங்க முடிவெடுக் கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரத்தில் அன்று நடை பெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர் வாகம், முதலமைச்சரின் அலு வலக அதிகாரிகள் ஈடுபட்டுள் ளனர். விரைவில் இது தொடர் பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. காஞ்சிபுரத்தில், பயனாளிகள் சிலருக்கு நேரடியாக உரிமைத் தொகை வழங்கும் முதலமைச்சர், அப்போதே வங்கிக்கணக்கில் மீதமுள்ளவர்களுக்கு பணத்தை செலுத்தும் வசதியையும் தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment