மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 8, 2023

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர், ஆக. 8 - கருநாடகா மாநிலத் தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வரு கிறது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது.

இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு  வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. 6.8.2023 அன்று அணைக்கு வினாடிக்கு 2,406 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 3,077 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 4,107 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையின் நீர் மட்டம் 56.85 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 22.39 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90ஆவது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திரு வாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட் டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 9,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

இது படிப்படியாக மேலும் அதி கரிக்க வாய்ப்புள்ளது. அணையின் நீர் இருப்பு 100 அடிக்கும் மேல் உள்ளதால் குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண் ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலை யில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

 அணையில் இருந்து உபரி நீர் 2,500 கன அடி 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது நிறுத்தப் பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment