கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 7, 2023

கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, ஆக. 7-  "தமிழ்நாட்டின் வரலாறு, எதிர்கால இலக்கு, பொருளாதார வளர்ச்சி, தொழில் சார் சிந்தனைகளுக்கு ஏற்ப, தமிழ் நாடு அரசு தனித்துவமான “மாநிலக் கல்விக் கொள்கை” வடிவமைப்பதில் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165ஆவது பட்டமளிப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) நடை பெற்றது. இதில், இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட் டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட பலர் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது:

"கடந்த 165 ஆண்டுகளாகத் தென்னிந்தியாவில் மட்டுமில்லாமல், நவீன இந்தியாவின் வளர்ச் சிக்கு நிலையான பங்களிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. அந்தக் காலத்தில் இருந்தது சென்னைப் பல்கலைக் கழகம் மட்டும்தான்.

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் தான் சென்னைக்கு வெளியே சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இன்றைய நாள், தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் மொத்தம் 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன. தமிழ்நாடு என்பது இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழ் நாட்டில் மட்டுமே 18 நிறுவனங்கள் உள்ளன.

தலைசிறந்த 100 பல்கலைக்கழ கங்களில் 21-ம், தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32-ம், தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10ம் தமிழ்நாட்டில் உள்ளன. தலை சிறந்த 200 பொறியியல் கல்லூரிக ளில் 35-ம், தலைசிறந்த மேலாண் மைக் கல்வி நிறுவனங்களில் 11-ம், 100 மருத்துவக் கல்வி நிறுவனங் களில் 8-ம் தமிழ்நாட்டில் உள்ளன. 

40 பல்மருத்துவக் கல்வி நிறுவ னங்களில் 9-ம், 30 சட்டக் கல்லூரி களில் 2-ம், 30 கட்டடக் கலைக் கல்லூரிகளில் 6-ம் தமிழ்நாட்டில் உள்ளன.

தமிழ்நாட்டின் வரலாறு, எதிர் கால இலக்கு, பொருளாதார வளர்ச்சி, தொழில்சார் சிந்தனை களுக்கு ஏற்ப, தமிழ்நாடு அரசு தனித்துவமான “மாநிலக் கல்விக் கொள்கை” வடிவமைப்பதில் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. “தமிழ்நாடு முதலமைச்சரின் புத் தாய்வுத் திட்டம்” என்ற புதிய சீர்மிகு திட்டத்தையும் அறிமுகப் படுத்தியுள்ளோம். 

இளைஞர்களுக்கு தொழில் முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத் துள்ளது.

அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிக்குள் நுழையும் மாணவி களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் விதமாக “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்” எனும் புது மைப்பெண் திட்டத்தை வெற்றி கரமாக நடத்தி பெண்கல்வியை ஊக்குவித்து வருகிறோம். தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களைச் சார்ந்த மாணவர்கள் போட்டித் தேர்வுகள், ஆட்சிப் பணித் தேர்வு கள், திறன்சார்ந்த தேர்வுகளுக்குத் தங்களைத் தயார் செய்யும் பொருட்டு மதுரையில் “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” பிரமாண்ட மாக அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் புதுப்பொலிவுடன் செயல் பட்டு வருகிறது.

பட்டம் வாங்குவதோடு உங் களது படிப்பு முடிந்து விடுவது இல்லை. ஒரே பட்டத்துடன் நிறுத்திவிடாதீர்கள். தொடர்ந்து படியுங்கள். தகுதியான வேலை கிடைத்த பிறகு படிப்பதை நிறுத்திவிடாதீர்கள். யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பது கல்வி யறிவு தான். அது அறிவியல் வழிப் பட்டதாக, பகுத்தறிவாக எதையும் கேள்வி கேட்டு ஆராயும் அறிவாக இருக்குமானால் உங்களை யாரா லும் வெல்ல முடியாது.

நீங்கள் இன்று பட்டம் பெறு வதை பார்த்து உங்கள் பெற் றோர்கள் எத்தகைய மகிழ்ச்சி யையும், பூரிப்பையும் அடைகிறார்களோ, அதே அளவு மகிழ்ச்சியை நானும் அடைகிறேன். 

முதலமைச்சராக மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தைச் சார்ந்த ஒருவனாக உங்களைப் பார்த்து பெருமைப்படுகிறேன்.

இன்று உங்கள் குடும்பத்துக்கும் பல்கலைக்கழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ள நீங்கள், எதிர்காலத் தில் நமது தமிழ்நாட்டிற்கும் இந் தியாவுக்கும் இதேபோல பெரு மைத்தேடித் தர வேண்டும், அது தான் நான் உங்களுக்கு வைக்கக் கூடிய வேண்டுகோள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக் கும் மேம்பாட்டுக்கும் நிதி ஆதாரப் பெருக்கத்துக்கும் தமிழ்நாடு அரசும் உயர்கல்வித் துறையும் என் றென்றும் துணை நிற்கும்" என்று முதலமைச்சர் பேசினார்.

No comments:

Post a Comment