முதலாமாண்டு பொறியியல் மற்றும் கலை அறிவியல் வகுப்புகள்வல்லம், ஆக. 12- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) முதலா மாண்டு பொறியியல் மற்றும் கலை அறிவியல் மாணவர்கள் தொடக்கவிழா நிகழ்ச்சி நடை பெற்றது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும் போது, இந்த நிகர்நிலைப்பல்கலைக் கழ கம் சிறப்பான வகையில் பல் வேறு சாதனைகளை அடைந்து உள்ளது. இங்கு பயின்ற மாண வர்கள் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா, அய்ரோப்பா, கனடா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். மேனாள் குடியரசு தலைவர், விஞ்ஞான மேதை மேதகு அப் துல்கலாம் அவர்கள் ஆறு முறை இப்பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்து மாணவர்களி டையே உரையாற்றியுள்ளார்.
மக்கள் பல்கலைக்கழகமாக விளங்கும் இப்பல்கலைக்கழகம் தனிப்பட்ட எவருக்கும் சொந் தம் இல்லை. பெரியார் மற்றும் மணியம்மையார் அவர்களின் பங்களிப்பால் உருவாக்கப்பட் டது. கிராமத்திலிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான மாண வர்களை இப்பல்கலைக்கழகம் பல பட்டதாரிகளாக உருவாக்கி யுள்ளது.
மேலும் சுற்றுச்சூழலை பாது காத்துள்ளது. இதுவரை தாய் தந்தையர் உங்களுடைய எதிர் காலத்தை நிர்ணயித்துள்ளார் கள். இப் பல்கலைக்கழகம் ஒரு கல்வி குழுமம், பிற்காலத்தில் தங் களை உயர்வடையச் செய்வதற்கு கட்டுப்பாடுகளை நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டும். உங்களுக்கு கல்வியில் எதுவும் சந்தேகம் என்றால் பேராசிரியர் களிடம் கேட்டு தெளிவு பெறுங் கள். உங்களை அஞ்சுறுத்த மாட் டார்கள், அன்பார்ந்த பெற்றோர் களே எங்களுடைய கல்விக் குழு மத்தில் பொறுப்புணர்ச்சியோடு இங்கு சேர்த்துள்ளீர்கள். விதி கள் கடுமையாக உள்ளது என்று நினைக்காததீர்கள். இது ஒரு கசப்பு மருந்துதான். வகுப்பறை களை கூர்ந்து கவனிக்க சொல் லுங்கள். வேலைவாய்ப்பைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங் களது பிள்ளைகளை ஒழுங்குப் படுத்துவற்காகதான் ஆசிரியர் கள் உள்ளார்கள்.
இப்பல்கலைக்கழகத்தின் குறிக்கோள் வேலை கேட்க மாட்டோம் . வேலை கொடுப் போம் என்பதுதான். இதனை நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
இந்நிகழ்வில் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி, பதிவாளர் பி.கே.சிறீவித்யா ஆகியோர் பல்கலைக்கழகத்தின் சிறப்பு அம்சங்களை எடுத்துக் கூறினர். துறைத்தலைவர்கள், முதன்மையர், பேராசிரியர்கள் ஆகியோர் உரையாற்றும்போது தேர்வு முறைகளைப் பற்றியும் நாட்டுநலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படையில் சேர விரும்பும் மாணவர்கள் சேர லாம் என்றும் மாணர்வகள் கடைப்பிடிக்கவேண்டிய பல் வேறு விதிமுறைகளைப் பற்றியும் விளக்கமாக எடுத்துக் கூறினர். தொடக்கம்
No comments:
Post a Comment