இதுகுறித்து இந்தியா கவலை தெரிவித்தது. இருந்தபோதிலும் திட்ட மிட்டபடி சீன போர்க் கப்பல் அண்மையில் கொழும்பு துறைமுகம் வந்தடைந்தது. 129 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 வீரர் கள் இருப்பதாகவும், இந்த படைக்கு கமாண்டர் ஜின் சின் தலைமை தாங் குவதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள் ளது.
இந்த நிலையில் இலங் கைக்கு சீன போர்க்கப்பல் வந்துள்ளது குறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "இலங் கையில் சீன கப்பல் இருப் பதாகச் செய்திகளைப் பார்த்தேன். அது போர்க் கப்பலா இல்லையா என் பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அதே சமயம் நாட்டின் பாது காப்பு நலன்களைப் பாதிக்கும் எந்தவொரு வளர்ச்சியையும் அரசாங் கம் கவனமாக கண்கா ணித்து, அவற்றைப் பாது காக்க தேவையான அனைத்து நடவடிக்கைக ளையும் எடுக்கிறது என் பதை உறுதிபட தெரிவிக் கிறேன்" என்றார். முன்ன தாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தியா வின் கடும் எதிர்ப்பை மீறி கொழும்பு துறைமுகத்தில் சீனா உளவு கப்பல் நிறுத்தப்பட்டது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment