கிருட்டினகிரிக்கு - ஒரு கிரீடம்! கவிஞர் கலி.பூங்குன்றன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 26, 2023

கிருட்டினகிரிக்கு - ஒரு கிரீடம்! கவிஞர் கலி.பூங்குன்றன்

நீதிக்கட்சி வளர்ந்த 

மாங்கனித் தோட்டமாம்

கிருட்டினகிரியில்

மானங்காத்த நம் தலைவர்

பெரியாருக்கோர் மாளிகை

பெருமையோ பெருமை!

ஜாதிக் கோட்டான்கள் அலறட்டும்!

மதவெறி யானைகள் பிளீறட்டும்!!

கருஞ்சட்டைச் சேனையுண்டு

கையிலே அங்குசமும் உண்டு

சனாதனத்தின் சல்லி வேரை 

சல்லடையாக்கும் திண்மையுண்டு

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்

அன்னை மணியம்மையார், ஆசிரியர் வீரமணி

அடையாளங்களோடு

அண்ணாந்து பார்க்கும் மாளிகை

எழிலார்ந்த தேன்கூடு

இளைஞர்தம் பாடி வீடு!

நூலகமும் படிப்பகமும் - அறிவுத்

தாலாட்டுப் பாடிடும்

அன்னையார் பெயர் அரங்கமோ

அறிவு விருந்தை படைத்திடும்

ஆமாம் - கிருட்டினகிரிக்கோ

அறிவின் கிரீடம்!

அதன் திறப்பு விழா

ஆகஸ்டு 28 காலையில்

கடல்காணா நகரம்

கருஞ்சட்டைக் கடலைக்

காணட்டும் வாரீர்! வாரீர்!!

No comments:

Post a Comment