எய்ம்ஸ்: மதுரையில் ஒரு செங்கல் - பீகாரில் அதுவுமில்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 19, 2023

எய்ம்ஸ்: மதுரையில் ஒரு செங்கல் - பீகாரில் அதுவுமில்லை!


தமிழ்நாட்டில் ஒரு செங்கலை வைத்து எய்ம்ஸ் கட்டிவிட்டோம், 900 படுக்கைகளைக் கொண்ட எய்ம்ஸ் செயல்படுகிறது, 400 மருத்துவமாணவர்கள் படித்துவருகின்றனர் .  அந்த மருத்துவமனைக்கு தலைவரை நியமித்துவிட்டோம். என்று எல்லாம் நாடாளுமன்றத்தில் பொய்மேல் பொய்யாக கூறி வருகின்றனர். 2021 ஆம் ஆண்டு சிவகங்கையில் பேசிய ஒரு பாஜக அமைச்சர்  மதுரையில் எய்ம்ஸ் திறந்தாகிவிட்டது என்றே கூறினார்.

அவர் பேசிய இடத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் தான் மதுரை உள்ளது. அதன் தென்பகுதியில் தான் எய்ம்ஸ் என்ற பெயர் பலகையுடன் கூடிய பொட்டல் காடு ஒன்று இன்றும்(19.08.2023) காட்சிதருகிறது. உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 

சு.வெங்கடேசன் மற்றும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் அந்தப் பொட்டல் காட்டிற்குச் சென்று எங்கே ஒன்றிய அமைச்சர் கூறிய எய்ம்ஸ் என்ற பதாகையோடு நின்றனர்.   தற்போது அதே போல் பீகாரிலும் நடந்திருக்கின்றது.

பாஜக செயலாளர்கள் அமர்வு ஒன்றில் காணொலி மூலம் பேசிய மோடி, இதோ 2024 தேர்தலுக்கான சங்கு முழங்கப் போகிறது. மக்களிடையே செல்லுங்கள் நாம் என்ன என்ன செய்தோம் என்று கூறுங்கள் என்று கூறிய அவர் பீகாரில் தர்பங்கா என்ற இடத்தில் நாம் எய்ம்ஸ் கட்டிமுடித்தோம். நோயாளிகள் 100 கிலோமீட்டர் தூரம் கட்ந்து மருத்துவமனைகளுக்குச் செல்லும் அவலம் முடிவிற்கு வந்துவிட்டது என்றார்.

மோடியின் இந்தப் பேச்சு உண்மைக்குப் புறம்பானது, காரணம் பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கும் போது தர்பங்கா எய்ம்ஸ்க்கான நிலம் ஒதுக்கப்பட்டு நிதியும் வழங்கப்பட்டது, ஆனால் பாஜகவோடு கூட்டணி, முறிந்து லாலுபிரசாத் கட்சியுடன் கூட்டணி அமைந்த சில நாட்களிலேயே ஒன்றிய அரசிடமிருந்து கடிதம் வருகிறது.  அதில் தர்பங்கா எய்ம்ஸ் திட்டம் கைவிடப்படுவதாகவும் ஒன்றிய அரசிற்கு எய்ம்ஸ் கட்டடம் கட்ட வழங்கப்பட்ட அரசு நிலத்தை திரும்பத் தருவதாகவும், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியும் ரத்து செய்யப் பட்டதாகவும் ஒன்றிய சுகாதாரத்துறை அறிவித்தது.   இது தொடர்பாக முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இது அத்தனையும் இன்றும் செய்தியாக வந்துகொண்டு இருக்கும் போது மோடி பீகார் தர்பங்கா மாவட்டத்தில் எய்ம்ஸ் கட்டப்பட்டு விட்டது, என்று கூறியிருக்கிறார். ஊர் பெயர் தவறாக கூறிவிட்டார் என்று கூட வைத்துக்கொண்டாலும் ஒன்றிய பாஜக ஆட்சியில் பீகாரில் எய்ம்ஸ் கட்டப்படவே இல்லை. அப்படி இருந்தும் பிரதமர் வேண்டுமென்றே பிற மாநில மக்களை நம்பவைக்க, கட்டாத ஒரு மருத்துவமனை மற்றும் கல்லூரி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது, மக்கள் அங்கு சென்று எளிமையாக சிகிச்சை பெறுகின்றனர் என்று கூறியுள்ளார்.

மதுரையிலாவது, ஒரு செங்கல்லை வைத்தார்கள். ஆனால், பீகாரில் கட்டட மாதிரி கூட தயாராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment