இதுதொடர்பாக உறுப்பு கொடை திட்டத்தின் முதல் இயக் குநர் அமலோற்பவநாதன் கூறிய தாவது:
தமிழ்நாட்டில் முதன்முதலாக 2008ஆம் ஆண்டு கலைஞர் தலைமையில் உறுப்பு மாற்று திட்டத்தை அரசு உருவாக்கி வெற்றிகரமாக நடத்தியது. இந்த சிகிச்சையை மற்ற மாநிலங்களில் இருந்து மருத் துவர்கள் வந்து கற்றுச் சென்றனர். ஒன்றிய அரசில் உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் தமிழ் நாட்டின் விதிமுறைகளை தழுவி உருவாக்கப்பட்டது.
இப்படி இந்தியாவுக்கு வழி காட்டிய இந்த திட்டத்தில் இது வரை 1,673 பேர் உறுப்பு கொடை செய்துள்ளனர். 10,003 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 10,000 பேர் உயிர் பிழைத்து இருப்பதற்கு கலைஞர் காரணம் என்பதை அவரது 5ஆம் ஆண்டில் நன்றி யுடன் நினைத்து பார்க்க வேண்டும்.
இந்த திட்டத்தின் ஆரம்ப காலத்தில் சிறுநீரக மாற்று அறு வைச் சிகிச்சை மட்டுமே செய்யப் பட்டது. அதிகமாக தனியார் மருத்துவமனையில் இந்த உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது.
அது சில ஆண்டுகளில் மாற்றப் பட்டது. அரசு மருத்துவமனையில் ஏழைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என முயற்சி எடுத்து செய்யப் பட்டது.
அதுமட்டுமின்றி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் நடந்து வருகிறது. மற்ற மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து குழந்தைகள் வந்து இதய மாற்று அறுவை சிகிச்சை, நுரை யீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக சென்று உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment