முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் பொறுப்புகளை வரையறுத்து அரசாணை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 6, 2023

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் பொறுப்புகளை வரையறுத்து அரசாணை வெளியீடு

சென்னை, ஆக. 6 - முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலு வலர்(சத்துணவு திட் டம்), வட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி) மற்றும் மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியா ளர்(சத்துணவு திட்டம்) ஆகியோருக்கான பணிகளும் பொறுப்புகளும் நிர்ணயம் செய்து தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2023-2024ஆம் நிதியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவு படுத்தப்பட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையால் ஆணை வெளியிடப்பட் டது. 

இந்த அரசாணையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (சத்துணவு திட்டம்) மட்டுமே கடமைகளும் பொறுப்புகளும் குறித்து அரசாணையில் தெரிவிக் கப்பட்ட நிலையில் தற் போது வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) ஆகி யோருக்கு பணிகளும் பொறுப்புகளும் நிர்ண யம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி முதலமைச் சரின் காலை உணவுத் திட்டத்தை தினந்தோ றும் கண்காணிக்கும் வகை யில் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) மற்றும் வட் டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) ஆகி யோருக்கு ஏற்கெனவே உள்ள பணிப் பொறுப்பு களுடன் சேர்ந்து கூடு தலாக முதலமைச்சரின் காலை உணவு திட் டத்தை கண்காணிக்கும் பணிகளும் கொடுக்கப் படுகின்றன. 

அதன்படி தினம் தோறும் காலை உணவுத் திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் முறையாக வழங்கப்படு வதை உறுதி செய்தல். உணவு வழங்கப்படும் நேரமான காலை 8. 15 மணி முதல் 8.50 மணிக்குள் மாணவர்களுக்குத் கிடைப்பதை உறுதி செய்தல், உணவு தயாரிக்க தேவையான மூலப் பொருட்கள் இருப்பு வைத்துக் கொள்ளுதலை கண்காணித்தல், தணிக்கை, பணியாளர்களுக்கு இடையே உரிய ஒருங்கிணைப்பை கண்காணித் தல், கண்காணிப்பு குழு கூட்டங்கள் என அனைத்தையும் கண்காணித்து முறையாக திட்டம் செயல்படுவதை உறுதி செய்ய அரசாணையில் உத்த ர விடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment