சண்டிகர், ஆக. 6 - அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் நடந்த வன்முறை காரணமாக இணைய சேவை முடக்கம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நூஹ் மாவட்டத்தில் கடந்த 31.7.2023 அன்று நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊர்வலத்தின் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால், அங்கு இரு சமூகத்தினரிடையே மதக் கலவரம் மூண்டது.
ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டதோடு, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும், கடைகளுக்கும் தீ வைத்தனர். இந்தக் கலவரம் அருகிலுள்ள குருகிராம் மாவட்டம் சோனா நகருக்கும் பரவியது.
இந்தக் கலவரத்தில் நூஹ் மாவட்டத்தில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். சோனா நகரில் பிரிவு-57 பகுதியில் அமைந்துள்ள அஞ்சுமான் மசூதிக்குள் நள்ளிரவில் புகுந்து நடத்திய தாக்குதலில், அங்கிருந்த துணை இமாம் சாத் (26) உயிரிழந்தார். மசூதிக்கும் கும்பல் தீ வைத்தது.
இந்தக் கலவரத்தில் 10 காவல்துறையினர் உள்பட 23 பேர் காயமடைந்தனர். 120 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அவற்றில் 8 காவல் துறை வாகனங்கள் உள்பட 50 வாகனங்க ளுக்கு தீ வைக்கப்பட்டன. வன்முறையில் பலியோனார் எண்ணிக்கை புதன்கிழமை 6-ஆக உயர்ந்தது.
இந்த நிலையில், அரியானாவின் நூஹ் மாவட்டத்தில் நடந்த வன்முறை காரணமாக இணைய சேவை முடக்கம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment