தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்தில் திராவிட மாணவர் சந்திப்பு கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்தில் திராவிட மாணவர் சந்திப்பு கூட்டம்

ஊத்துமலை, ஆக. 3 - ஊத்து மலையில் திராவிட மாணவர் சந்திப்பு கூட்டம் த.சீனிவாசன் இல்லத்தில் மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் சீ.செங்கதிர்வள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. 

கழக மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்த நாடு.இரா.குணசேகரன்  திராவிட மாணவர் கழ கத்தின் சிறப்பினை, தோழர்கள் ஆற்ற வேண்டிய பணிகளை எடுத்து ரைத்தார். மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், துணைத்தலைவர் செந்தில்குமார், வெ. அன்பழகன், மாணவர் கள் சீ.செல்லத்தங்கம், க.மூர்த்திகரன், கொ.முத் துச்செல்வன், க.சந்தோசு, மு.முகேசு ஆகியோர் கலந்து கொண்டு  சிறப் பித்தார்கள். சுயமரியாதைச் சுடரொளி வெள்ளைத் துரை நினைவாக ஆகஸ்ட் 13ஆம் தேதி வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்திட முடிவு செய்யப் பட்டது.


No comments:

Post a Comment