சிலர் தங்கள் வாழ்நாளையே சாதனை மேடையாகவும் கொண்டிருப்பார்கள். உதாரணத்திற்கு கடலுக்குள் முத்து எடுப்பவர்களைச் சொல்லலாம். இப்படி வாழ்வின் ஒவ்வொரு நாளையும் சாதனையாகவே மேற்கொள்ளும் பலரும் இந்த உலகில் இருந்துகொண்டு தான் இருக்கின்றார்கள். நாம் முடியாது என்று சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷ யத்தையும் இந்த உலகத்தில் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒரு நபர் சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியைச் சொல்லலாம்.
ஏழ்மையான சூழலில் பிறந்து, வளர்ந்து, கல்வியின் மூலமாக மேம்பட்டு உயர் பதவியை அடைந்து சாதனைப் பூவாக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் தான் அன்சல். வாழ்வில் சந்தித்த தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்து சாதித்த சாதனை பெண் தான் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அன்சல். இவரின் தந்தை சுரேஷ் அங்குள்ள கிராமத்தில் தேநீர் கடை நடத்தி வந்தார். இவரது மகள் அன்சல் தான் தற்போது இந்திய விமானப்படையில் ஃப்ளையிங் அதிகாரியாகப் பதவி ஏற்றுள்ளார்.
சமீபத்தில் இந்திய விமானப்படையில் சேர்ந்துள்ள இவரது வெற்றிப்பயணம் அவ்வளவு எளிதானதல்ல, என் மகள் விமானப் படையில் இணைந்துள்ளது பெருமைமிக்க தருணமாகும். ஆனால் அவர் பதவி ஏற்பதை எங்களால் பார்க்க முடியவில்லை. லாக்டவுன் காரணமாக விமானப் படை மய்யத்திற்கு எங்களால் செல்ல முடியவில்லை, என்கிறார் அன்சலின் தந்தை சுரேஷ், அன்சலுக்கு சிறு வயது முதலே இந்திய விமானப் படையில் சேர வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்து உள்ளார். அதன் பிறகு அதைத் தனது இலக்காக மாற்றிக் கொண்டார். அவரின் குடும்பத்தினருக்கு அவரின் கனவை நினைவாக்குவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஆனால், அன்சல் தன் முடிவில் திடமாக இருந்தார். பள்ளியிலும், கல்லூரியிலும் தனது கல்வியை சிறப்பாக படித்தார்.
அதனால் அன்சல் படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கி பல பரிசுகளை பெற்றார். தன்னுடைய கிராமத்தில் நடந்த வெள்ளப்பாதிப்பின் போது இந்திய விமானப்படையின் வீரச் செயலை பார்த்த அன்சல் வியப்பில் ஆழ்ந்தார். அப்போதே விமானப் படையில் சேர முடிவெடுத்தார். அன்சல் விமானப் படையில் சேர அதற்கான தேர்வுக்கு தயாரானார். நூலகத்திற்குச் சென்று அதற்கான புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.
தீவிரமாக முயற்சி செய்து, சிறந்த பயிற்சியுடன் 6ஆவது முறையாக தேர்வு எழுதி முயற்சி செய்து வெற்றியை ஈட்டினார். கடந்த 25 ஆண்டுகளாக டீக்கடை நடத்தும் சுரேஷ், பணப் பிரச் சினையால் பலமுறை தவித்துள்ளார். அதனால் அன்சலின் பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணத்தை செலுத்த முடியாமல் கடன் வாங்கியுள்ளார்.
No comments:
Post a Comment