காவேரிப்பட்டி கிராமத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா திராவிடர் கழகக் கொடியேற்று விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 9, 2023

காவேரிப்பட்டி கிராமத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா திராவிடர் கழகக் கொடியேற்று விழா!

காவேரிப்பட்டினம்,   ஆக. 9 - காவேரிப்பட்டி அக்கிரகார கிராமம் - தேவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள தலைமைக் கழக அமைப் பாளர் க.நா.பாலு அவர் களின் இல்லத்திற்கு 30.7.2023 அன்று வருகை புரிந்த கழகத் தோழர்கள் அனைவருக்கும், இனிப்பு, காரம், தேநீர் வழங்கி உபசரிக்கப்பட்டது. பின்னர் கழகத் தோழர்கள் மற் றும் உறவினர்கள் முன்னிலையில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி இயற்கை செடி, கொடிகளுக்கிடையே நமது கழகக் கொடியினை ஏற்றி வைத்தார்.

பொதுக்கூட்டம் - தி.மு.க. "சுயமரியாதைச் சுடரொளிகள்" படத்திறப்பு

மேட்டூர் மாவட்டம் காவேரிப்பட்டியில் 30.7.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை 5:00 மணிக்கு கூட்டம் தொடங் கியது.

கூட்டத்திற்கு தலை மைக் கழக அமைப்பாளர் க.நா.பாலு தலைமை யேற்க சேலம் மாவட்டத் தலைவர் அ.ச.இளவழ கன் அனைவரையும் வர வேற்றுப் பேசினார்.

மயிலம்பட்டி தி.மு.க. கிளைச் செயலாளர் எம். பி.ஆறுமணி, காவேரிப் பட்டி வார்டு செயலாளர் கே.பி.அண்ணாட்சி, கே.எல்.கிருஷ்ணன், டீசல் நாராயணன், கே. ஆர்.தங்கராசு, பலராமன், தி.மு.க. ஒன்றிய மேனாள் பொருளாளர் ஆர்.ரவி, பெரியார் பெருந்தொண் டர் கை.முகிலன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி.அன்பு மதி, சா.ரவி, ராஜராஜன், ஆர்.எம்.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்ககிரி ஒன்றிய தி.மு.க. அவைத்தலைவர் கா.அ.கோபால், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றினை எடுத்து ரைத்து, தொடக்க உரை யாற்றினார்.

பின்னர் சேலத்துச் சிங்கம் வீரபாண்டியாரின் நெருங்கிய தோழர் கா. வ.கிருட்டிணன் அவர்க ளின் படத்தினையும், சீரிய பகுத்தறிவாளர் கா. வ.கோவிந்தன் அவர்க ளின் படத்தினையும், சிந் தனைச் சிற்பி. சி.பி.சிற்ற ரசு அவர்களது தலைமையிலே 1957இல் ஜாதி மறுப்புச் திருமணம் செய்து கொண்ட கா.வ. ஏழுமலை - தனம் ஆகி யோரின் படங்களை கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி திறந்து வைத்தார்.

புத்தகங்கள் பரிசளிப்பு:-

புதியதாக பொறுப் பேற்றுள்ள தலைமைக் கழக அமைப்பாளர் க.நா.பாலுவைப் பாராட்டி நூல்கள்: - “கலைஞர் செதுக்கிய தமிழகம்“ தி.மு.க. ஆட்சிக் காலச் சாதனைகள் - புலவர் முத் துவாவாசி அவர்களால் எழுதப்பட்ட - பாகம் -1. நூலினை சித்தார் தி.மு.க. பிரமுகர் கா.வ.இராமலிங் கம் அவர்கள் - பாகம் 2 நூலினை அ.தி.மு.க. பிர முகர் - மோகன் அவர்க ளும், பாகம்-3 நூலினை அமைப்பு சாரா தொழிற்சங்கச் செயலா ளர் கே.என்.குணசேகரன் அவர்களும் பாகம்-4 நூலினை கே.ஏ.கோபால் அவர்களும் வழங்கினார் கள்.

“வைக்கம் போராட் டம் முக்கிய சிறு குறிப்பு கள்” - துண்டறிக்கைகளை மகிழன் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பா.எழில் பொதுமக்களிடம் வழங் கினார்.

1957 தேர்தலுக்கு முன் னர் அறிஞர் அண்ணா அவர்கள் காவேரிப்பட் டிக்கு வருகை புரிந்ததை யும் - குதிரை வண்டியில் தோழர்கள் கொடி ஏந்தி வந்ததையும் - தான் கர காட்டம் ஆடியதையும் - காரிலிருந்து கண்டு ரசித்த அண்ணா, காரை விட்டு கீழே இறங்கி, சிவம் படத்தெரு, மேடை வரை நடந்தே வந்ததை யும், கண்ணீர் மல்க, சித் தார் கா.வ.இராமலிங்கம் நெகிழ்ச்சியுடன் உரை யாற்றினார்.

சரியாக 6:00 மணிக்கு கழகத் துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி அவர்கள் மடைதிறந்த வெள்ளம்போல் உரை யாற்றி - பொதுமக்களி டையே பகுத்தறிவுப் புத் துணர்ச்சியை உருவாக்கி னார்கள். சரியாக 7:00 மணிக்கு சங்ககிரி வெங்கடாசலம் நன்றி கூற கூட் டம் நிறைவடைந்தது.


No comments:

Post a Comment