அயல்நாட்டு மண்ணில் வாகைசூடிய வீரர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 18, 2023

அயல்நாட்டு மண்ணில் வாகைசூடிய வீரர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு


சென்னை, ஆக. 18- காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான பன் னாட்டு விளையாட் டுப் போட்டிகள்-2023இல் கலந்து கொண்டு பதக் கங்கள் வென்ற தமிழ்நாடு காவல் துறை வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

கனடா நாட்டின் வின்னிபெக்கு நகரில் நடைபெற்ற "காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான பன் னாட்டு விளையாட்டுப் போட்டிகள்- 2023இல் கலந்து கொண்டு பதக்கங் கள் வென்ற தமிழ்நாடு காவல் துறை வீரர்கள், தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர் களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

காவல் மற்றும் தீய ணைப்புத் துறையினருக் கான பன்னாட்டு விளை யாட்டுப் போட்டிகள், கனடா நாட்டின் வின்னி பெக்கு நகரில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 6 வரை நடைபெற்றன. இப் போட்டிகளில், சுமார் 50 நாடுகளிலிருந்து 8,500-க்கும் அதிகமான காவல் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் கலந்து கொண்டனர். 

இதில், தமிழ்நாடு காவல் துறை தடகள அணியைச் சேர்ந்த காவல்  கண்காணிப்பாளர் ஏ. மயில்வாகனன், காவல் ஆய்வாளர்கள் ராஜேஸ் வரி, எஸ். சரவணப் பிரபு, கே.கலைச்செல்வன், ஆர். சாம் சுந்தர், என். விமல் குமார், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வி. கிருஷ்ணமூர்த்தி, கே. பாலு, தலைமை காவலர் கள் பி. சந்துரு, எஸ். சுரேஷ் குமார், சி. யுவ ராஜ், டி. தேவராஜன், மக ளிர் தலைமை காவலர்கள் எம். லீலாசிறீ, ஆர். பிர மிளா, டி. தமிழரசி ஆகிய 15 பேர் பல்வேறு போட் டிகளில் பொதுப்பிரிவில் பங்கேற்று, 15 தங்கம், 11 வெள்ளி மற்றும் 15 வெண் கலம், என மொத்தம் 41 பதக்கங்களை வென்று உள்ளனர். 

இதுவே தமிழ்நாடு காவல் துறை தடகள அணி ஓராண்டில் வென்ற அதிகபட்ச பதக்கங்களா கும். இவ்வீரர்கள், அர சின் அனுமதி பெற்று, தங்கள் சொந்த செலவில் இப்போட்டிகளில் பங் கேற்றுள்ளனர். இந்நிலை யில், பதக்கங்கள் வென்ற 15 காவல் துறையினர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

காவல் மற்றும் தீய ணைப்புத் துறையினருக் கான பன்னாட்டு விளை யாட்டுப் போட்டியில், அகில இந்திய காவல் துறை விளையாட்டு கட் டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட எஸ். சிவா, ஆர். தினேஷ், வி. தினேஷ், ஜி.எஸ். சிறீது ஆகிய 4 காவலர்கள் 5 தங்கம் மற்றும் 7 வெள்ளி என 12 பதக்கங்களை வென்றுள்ளனர்.

No comments:

Post a Comment